Sunday, July 14, 2019

நட்சத்திர பதிவு ரோகினி:


நமது ஜெனன கால ஜென்ம நட்சத்திரத்தை தீர்மானிப்பது சந்திரன்.ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் ஒரு நட்சத்திரத்திற்கு இருக்கும் சிறப்பு இன்னொன்றிற்கு இருக்கும் என்று கூறிவிட முடியாது.இருப்பினும் 27லிலும் சிறந்த நட்சத்திரமாக ரோகினியை கூறுவதில் தவறு இல்லை.

சந்திரன் உச்சம் பெற்று சுய சாரத்தில் இருப்பது ரோகினியில் மட்டும்தான்.சந்திரன் என்றில்லை, சூரியன்,புதன்,சுக்கிரன் ,சனி என இந்த கிரகங்களுக்கும் மிகவும் பிடித்தமான நட்சத்திரம் ரோகினி தான்.

குருஷேத்திரத்தில் பாண்டவர் பக்கம் நின்று பாஞ்சாலியின் மானம் காத்த கண்ணன் அவதரித்ததும் ரோகினியில் தான்.

இந்த நட்சத்திரத்தின் குறியிடு ரதம் ஆகும். தேர் என்பது தனக்கு முன்னால் செல்பவர் தன்னை இயக்குபவரின் நண்பரா பகைவரா என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சாரதியின் கட்டளைக்கு ஏற்ப போய் கொண்டே இருக்கும். அது போலவே ரோகினி நட்சத்திர அன்பர்களும் தங்கள் வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை பற்றி கவலை படாமல் வாழ்வை எதிர்நோக்கி போய்க்கொண்டே இருப்பார்கள்..அவ்வளவு மனஉறுதி மிக்கவர்கள்...

அதே போல் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் போது புதுமையை புகுத்தி அசத்தி விடுவார்கள்.கலைத்திறன் என்பது பிறவிலேயே இருக்க பெறும்..அது பாடல், ஓவியம் அல்லது வேறு வடிவில் வெளிப்படும்.

பெண்கள் தொடர்பான தொழில்களான ஜவுளி,அழகியல் பொருட்கள் மற்றும் பல தொழில்கள் கைகொடுக்கும்..

ரோகிணி அன்பர்களுக்கான கோயில் காஞ்சிபுரத்தில் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ள பாண்டவ பெருமாள் ஆலயம் ஆகும். கிருஷ்ண பகவான் 25 அடி உயர விஸ்வரூபம் கொண்டு காட்சி தருகிறார். ஏகாதசி,கிருஷ்ண ஜெயந்தி, அஷ்டமி திதி ஆகிய தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கும்.ஜென்ம நட்சத்திர நாளில் நீங்கள் வணங்கி வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.

நன்றி.