Sunday, July 7, 2019

ஏழரைச் சனி,அட்டமச் சனியின் பாதிப்புகள் ஒவ்வொருவருக்கும் வயதுக்கு ஏற்றபடி எப்படி இருக்கும்?


சனி பகவானை நீதிமான் என அழைக்கிறார்கள் என்ற காரணம் புரிகிறது.

கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரன் மட்டுமே.

சனிபகவான் நல்லவன் ,கெட்டவன் ஏழை, பணக்காரன் ,அறிவாளி ,முட்டாள் ,குழந்தை வயதானவர் ,ஒழுக்கமானவர் ,நல்ல பண்புடையவர், கோபமானவர் ,தான தர்மவான் ,வஞ்சகர் ,கருமி ,கோவில் பூசாமி ,ஜோதிடர் என எவரையும் தன்னுடைய ஆதிக்க சக்தியினால் விட்டுவைப்பதில்லை.

ஒவ்வொருவரையும் தன்னுடைய ஆதிக்க காலத்தில் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டு செல்கின்றார்.

சென்ற பிறவியில் நாம் செய்த நல்ல ,தீய பலனுக்கு ஏற்றவாறு தீய பலன்களின் தாக்கம் அக்காலத்தில் ஏற்ற, இறக்கமாக இருக்குமே தவிர ஏழரைசனி காலகட்டங்களில் அவரவர் செய்த முன்வினைப் பாவ புண்ணியத்தின்படி நிச்சயமாக அதற்கேற்றபடி தண்டனை உண்டு.

இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது.

ஒருவர் நல்ல பலன்களை ஜாதகத்தில் செய்திருந்தால் அவருடைய லக்னாதிபதி வலுத்து சம்பந்தப்பட்ட ஏழரை, அட்டமா காலகட்டங்களில் நல்ல திசை சென்று கொண்டிருக்கும். இதை அவர் வாங்கி வந்த நல்ல வரம் என்றே கூறலாம்.

அது போல் ஒரு ஜீவன் ஏழரை,அட்டடம சனியில் படாதபாடுபட்டு கடுமையாக கசக்கிப்பிழிய படுகிறதென்றால் அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி வலு குறைந்து சம்பந்தப்பட்ட ஏழரை, அட்டமச் சனி காலகட்டங்களில் எதிர்மறை பலன்களை தரக் கூடிய சூரிய, சந்திர தசை , சனி திசை சென்று கொண்டிருக்கும் அல்லது அந்த லக்னத்திற்கு எதிர்மறை பலனை தரக்கூடிய திசைகள் நடப்பில் இருக்கும்.

ஜாதகத்தைப் பார்த்த உடன் ஜோதிடருக்கு அது பிடிபட்டுவிடும்.

இங்கு ஆலயத்திலேயே தங்கி இறைவனுக்குத் தொண்டு செய்யும் பூசாரியும் ,அடுத்தவருக்கு பலன் சொல்லும் ஜோதிடரும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைவருக்கும் ஒரே நீதி ,ஒரே நியாயம் மட்டுமே.

சரி ,சனியின் சனிபகவானின் பாதிப்பு வயதுக்கு ஏற்றபடி எப்படி இருக்கும் என பார்ப்போம் வாருங்கள்.

பிறக்கும் போது ஒரு குழந்தைக்கு ஏழரை ,அஷ்டம சனி நடந்து அதனுடைய லக்னாதிபதியும் ,பூர்வபுண்ய ஸ்தானாதிபதியும் , பாக்கிய ஸ்தானமும் கெட்டு நடப்பில் எதிர்மறையான தசைகள் நடந்தால் பிறக்கும்போதே உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு ICUல் இருக்கும் நிலை ஏற்படலாம்.

அதுவே 4 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம் .பள்ளி செல்ல அடம் பிடிக்கும். விளையாட்டின் போது அடிக்கடி காயம் ஏற்படும். விளையாட்டில் தன்னுடன் பக்கத்தில் விளையாடும் பிள்ளைகள் தன்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டிர்கிறார்கள் என பெற்றோரிடம் கூறும்.

12 வயது முதல் 21 வயது வரை மிகவும் எச்சரிக்கையாக காலகட்டம் சற்று தடுமாறினாலும் வாழ்க்கை தடுமாறி விடும். ஆணுக்கு கூடாநட்பு ,புகைப்பிடித்தல் ,மது அருந்துதல் காதலில் விழுதல், என தடம் மாறி படிப்பில் அரியர்ஸ் வைக்கும் நிலை ஏற்படலாம். பெண்ணுக்கு கூடா நட்பு கேடாய் முடியும்.கவனம்.

21 வயது முதல் 27 வயது வரை படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் ,வேலை கிடைத்தாலும் ,சொற்ப சம்பளத்துடன் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்ற நேரிடும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் வாழ்க்கை நகரும்.

30 லிருந்து 50வயது வரை வழக்கம்போல் குடும்ப ,பொருளாதார, கடன் பிரச்சனை ,மனைவியுடன் கருத்து வேறுபாடு ,தாய் தந்தையர் இறுதிக்காலம் ஏற்படலாம். புதிதாக ஏதாவது நோயின் அறிகுறி ஏற்படலாம்.

50 வயதில் இருந்து 80 வயது வரை உடல் நிலை சார்ந்த பிரச்சனையோ ,மருமகன் மருமகளால் தொல்லையோ, வீட்டில் மதிக்காமல் முதியோர் இல்லம் சேர்க்கப்படுவது, பேச்சுக்கு வீட்டில் மதிப்பில்லை என எண்ணி ஏங்குவது இது போன்ற பலன்கள் ஏற்படலாம். உடல்நிலை சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய நேரம் .அடிக்கடி ஹாஸ்பிடலுக்கு சென்று மாத வருமானத்தில் அல்லது பென்சனில் ஒரு பகுதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேரிடும்.

80 வயதிற்கு மேல் தொடங்கிய புள்ளியில் முடியும் நிலையாக உடல் நிலை பாதிக்கப்பபட்டு இறுதி நிலை ஏற்படலாம்.

சனியின் தாக்கம் குறைய சிவ வழிபாடும், கால பைரவர் வழிபாடும் ,அனுமன் வழிபாடும் நல்ல பலனைக் கொடுக்கும் ராம ஜெயம் எழுதுவது சிறப்பு.