Tuesday, December 24, 2019

சூரிய கிரகணம் 2019 ஒரு விளக்கம்🌹🌷



26ஆம் தேதி அன்று காலை 8 மணி அளவில் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் சூரியன், சந்திரன், சனி, குரு, கேது, புதன் என கூட்டணி அமைத்திருக்க அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் ஸ்பரிசம் தொடங்கி மோட்சம் வரை 5 நிலைகளை கடக்கிறது.

🌹கிரக சேர்க்கை🌹

இது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் சூரியனை கேது என்ற பாம்பு விழுங்குமா என்றெல்லாம் கேட்க வேண்டாம். ராகு கேது நிழல் கிரகங்கள். இம்முறை கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை, சூரிய கிரகணத்தினால் ஏதேனும் ஆபத்து வருமே என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். சமூக வலைத்தளங்களிலும் you tube சேனல்களிலும் பல தகவல்கள் இதைப்பற்றியே பதிவிட்டு வருகின்றனர்.

காலபுருஷ தத்துவப்படி 9ம் வீட்டில் அதாவது தனுசில் குரு ஆட்சி புரிந்து இருப்பது மிகச் சிறந்த ஒன்று. டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் சேர்க்கை என்பது இரண்டரை நாட்களில் இந்த நிகழ்வு நடைபெறப்போகிறது. இந்த அமைப்பால் ஒரு சில யோகங்கள், கிரக யுத்தம், மற்றும் தோஷங்கள் நடைபெறும்.

🌻சூரிய கிரகணம் 2019🌻
சூரிய கிரகணம் அன்று அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டும்

ஆறு கிரகங்கள் சேர்க்கை கூடவே சூரிய கிரகணம் , வருஷ கிரகங்கள் என்று கூறப்படும் குரு சனி, கேதுக்களுடன் மாத கிரகங்கள் என்று கூறப்படும் சூரியன், புதன் மற்றும் இரண்டரை நாட்கள் சஞ்சரிக்கும் மனோகரகனுடன் சந்திரனோடு சேரும்பொழுதும் அதே நேரம் ராகுவின் பார்வையும் இந்த காலகட்டத்தில் இடம்பெறும். அடுத்தது தனுசில் ஆட்சி பெற்ற சுபத்தன்மை கொண்ட குருவோடு எந்த கிரகம் சேர்ந்தாலும் சுபத்துவம் பெரும். குருவும் சந்திரனும், குருவும் சனியும், குருவும் கேதுவும், குருவும் சூரியனும், குருவும் புதனும் சேர்ந்து இருப்பது பல்வேறு யோகங்களை தரும். இந்த கால கட்டத்தில்தான் சூரிய கிரகணம் எனப்படும் வானியல் அதிசயமும் நிகழ உள்ளது.

🍀சூரிய கிரகணம் நிலவின் தோற்றங்கள்🍀

இந்த சூரிய கிரகணம் ஸ்பரிசம் தொடங்கி மோட்சம் வரை 5 நிலைகளை கடக்கிறது. சூரியனை நிலவு தீண்டுவது #ஸ்பரிசம், அதுவே முதல்நிலை,

அடுத்து சூரியனுக்குள் நிலவு முழுமையாக சென்று விடுவது இரண்டாவது நிலை #உள்_நிலவு

அடுத்தது நிலவினால் சூரியன் மறைக்கப்பட்டு விளிம்பு பிரகாசிப்பது மூன்றாவது நிலை இதுவே #வளைய_சூரிய_கிரகணம்.

சூரியன் நெருப்பு வளையமாக பிரகாசிக்கும். பின்னர் படிப்படியாக நிலவு சூரியனிடம் இருந்து விலகத் தொடங்குவது நான்காவது நிலை மோதிர வளையம்

அடுத்து கிரகணம் முழுமையாக விலகுவது ஐந்தாவது நிலை இதுவே #மோட்ச_நிலையாகும்.

🍁

🌺🌸என்ன செய்யக்கூடாது🌸🌺

🌷சூரிய கிரகணம் வரும் நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது .

🌷சாப்பிட கூடாது

🌷கர்ப்பிணி பெண்களும் வெளியில் செல்ல கூடாது

🌷வண்டி வாகனத்தில் வேகமாக போகாதீங்க

🌷புதிய முயற்சிகள் வேண்டாம்.

🌷பணம் கொடுக்கல் வாங்கல், ஜாமீன் கையெழுத்து எதையும் போடாதீங்க என்று எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.

கிரகண நேரத்தில் நல்லதை நினைத்து பிராத்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும