



திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Magnoliid
வரிசை: Magnoliales
குடும்பம்: Myristicaceae
பேரினம்: Myristica Gronov.
இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலா பொருட்களும் மருத்துவ குணம் உள்ளவை. அதில் சில விசேஷ தன்மையுள்ள மருத்துவ பொருட்களும் உள்ளன. அதில் ஜாதிக்காய் மிக முக்கியமானது.
ஜாதிக்காய் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இது ஜீரணத்திற்கு மிக சிறந்த மருந்தாகும்.
#முகத்தை_அழகாக்கும்:
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும், முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
#அம்மை_கொப்புளங்கள்_சரியாகும்:
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும். ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
#தசைப்பிடிப்பை_நீக்கும்:
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.
காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
#வயிறுசம்பந்தமான_நோய்களுக்கு
ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.
#ஜாதிக்காய்_நலக்குறிப்புகள் :
ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.
ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
அதேபோல் ஜாதிக்காயைன் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.
அதே போல் அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிர்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு சிட்டிகையளவு தூளை எடுத்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் போட்டுக் கலக்கி 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலடு நீங்கும். இது நல்ல பலம் தரும். ஆட்டு ஈரல், கோழி முட்டை, காரட் இவைகளையும் நல்ல கீரை வகைகளையும் சாப்பிட்டு வரவேண்டும்.
ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு 1௦ கிராம் எடுத்து, உரலில் போட்டுத் தூள் செய்து மாச்சல்லடையில் சலித்து, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு விரற்கடையளவு எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் விட்டுக் கலக்கிக் குடித்து விட வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, சுவாசகாசம், பெரும்பாடு, பக்கவாதம், தலைவலி, வயிற்றுவலி இவைகளைக் குணப்படுத்தும்.
ஜாதிக்காய், சீரகம், சுக்கு இவைகளை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேலைக்கு ஒரு உருண்டை வீதம் அரை யாழாக்குப் பச்சைப் பசும்பாலில் காய்த்துக் குடித்து வந்தால் மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும்.
ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில்வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பலஉள்ளன, அதில் மிக எளிதாக மிகவும்பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.
எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும் ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை வைக்க பல் வலி குணமாகும்.
ஜாதிக்காயை வாங்கி வந்து அதை உடைத்து கோலிக் குண்டளவு ஜாதிக்காயை சுத்தமான அம்மியில் பால்விட்டு மைபோல அரைத்து, இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றிக் கனமாகப் பற்றுப் போட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இந்த விதமாக ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால் கண்பார்வை தெளிவடைந்து விடும்.
ஜாதிக் காயை அரைத்து தொப்புளை சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக் கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக் காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.
ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கருமதழும்புகள் மீதும் பூசி வந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்தமருத்துவம்.
காலரா என்னும் வாந்தி பேதியைக் குணப்படுத்தும் அரிய சக்தி ஜாதிக்காய்க்கு உண்டு. ஒரு ஜாதிக்காயை உடைத்து ஒரு புதுச் சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, அதிலுள்ள ஜாதிக்காயை எடுக்காமல் அப்படியே வைத்து, தண்ணீரை மட்டும் அரை டம்ளர் அளவு இறுத்து உடனே குடிக்கக் கொடுத்து விடவேண்டும். இந்த விதாமாகக் கால் மணிக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் வாந்தி பேதி குணமாகும். கஷாயம் தீரும் சமயம் அதே அளவு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த விதமாகக் கொடுத்து வந்தால் நோயாளி பிழைத்துக் கொள்வான்.
ஜாதிக்காய் குழந்தைகளுக்கு கை முட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு ஜாதிக்காயை நீரில் உரைத்து அந்த இடத்தில் தடவி வர குணமாகும்.
அம்மை நோய் கண்டவர்கள், ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு, பருத்திப் பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர கொப்புளங்கள் வாடும்.
ஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
ஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.
ஜாதிப் பத்திரியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சுரம், பெருங்கழிச்சல், நீர் நீராய் ஏற்படுகின்ற பேதி முதலியன குணமாகும்.
ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.
“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”
அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.
ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.
எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.
ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.
ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவற்றை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாவு சல்லடையில் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும், ஒரு டீஸ்பூன் அளவு தூளை எடுத்து, காய்ச்சிய பசும்பாலில் கலக்கி, 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலட்டு தன்மை நீங்கும்.
ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு, 10 கிராம் எடுத்து, உரலில் போட்டு தூள் செய்து மாவு சல்லடையில் சலித்து, வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, காய்ச்சிய பசும்பாலில்
கலக்கிக் குடித்து வந்தால், வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, பக்கவாதம், தலைவலி, வயிற்று வலியையும் குணப்படுத்தும்.
ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மை போல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேளைக்கு, ஒரு உருண்டை வீதம் ஒரு டம்ளர் பச்சை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும்.
ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். விந்து முந்துதலை தவிர்க்க, மூலிகைகள் பல உள்ளன. அதில் மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.
எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும், ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து, நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து, கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும்.
காலை, பகல், மாலை என, ஒரு நாளைக்கு மூன்று வேளை வைத்தால் பல் வலி குணமாகும். ஜாதிக்காயை உடைத்து, கோலிக் குண்டளவு ஜாதிக்காயை சுத்தமான அம்மியில் பால் விட்டு மை போல அரைத்து, இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றிக் கனமாக பற்றுப் போட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண்களைக் கழுவினால், கண்பார்வை தெளிவடைந்து விடும். ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசி வந்தால், நாளடைவில் மறையும் என, சித்த மருத்துவம் கூறுகிறது.
#பிடித்திருந்தால்_share_செய்யவும்.