Sunday, December 22, 2019

#நாளை_சோமவார_பிரதோஷம்


சோமவார பிரதோசம் சிறப்பு vவாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும்.
☘️
சிவ ஆலயத்திற்கு சென்றாலே sநந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தியிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.
☘️
நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உஉளமர ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும் நன்மையெல்லாம் பெருகும்.