


மாந்தியின் பிறப்பு பற்றி பார்ப்போம்!
மகாப்பெரிய சிவ பக்தனான இராவணன் தன் மகன் இந்திரஜித்தின் பிறப்பின்போது எல்லா கிரகங்களும் உச்சத்தில் அல்லது ஆட்சியில் இருக்க நவ கிரகங்களுக்கும் ஆணையிட்டான். ஆனால் சனியில் அழுக்கு என்று (தோன்றிய பூமிக்கு நிலவுபோல) சொல்லப்படும் அதன் துணைக்கிரகம் டைட்டான் மட்டும் தவறான இடத்தில் சனி பகான் எறிந்தார்.நது ஆயுளை நிர்ணயிக்கும் ஒரு கிரியா ஊக்கி என்று சொல்லாம். அதன் தந்தையான சனி பகவான் ஆயுளை கொடுக்க, அவன் பெரியப்பா எமன் அதன் முடிவில் எடுக்கும் பொறுப்பை செய்கிறார்.
அப்படி சனி தூக்கி எறிந்த அழுக்கு இராவணன் மகன் இந்திரஜித்தின் ஆயுளை பாதிக்கும் இடத்தில் அமர்ந்து, அவன் சாவின் மூலம் இராவணனின் உயிரை பறித்தது.
மாந்தி/குளிகன் வேறு வேறா?
இல்லை, இரண்டும் ஒன்றே, பகல் நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் மாந்தி என்றும், இரவு நேரத்தில் அதையே குளிகன் என்றும் சொல்வர்.
எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
ஒரு நாளில் பகல் 12 மணி நேரம் மாந்தியாக ஒவ்வொரு 1 1/2 மணி நேரத்திற்கு ஒரு கட்டம் பின் நோக்கி நகர்கிறது.
ஆயுளை நிர்ணயிக்குமா?
ஆயுளை நிர்ணயிப்பது அப்பா சனி, தாத்தா சூரியனின் வேலையாக இருந்தாலும், அதை கிரியா ஊக்கியாக இருந்து அதை செய்யவைப்பது மாந்தி. அதாவது அவர் ஆயுளுக்கு கொஞ்சம் முன்போ, அல்லது பின்போ அதை மாற்றும் வல்லமை மாந்திக்கு உண்டு.
வேறு என்ன செய்யும்?
அகால மரணத்தில் அது விபத்து, கொலை, தற்கொலை போன்ற வடிவில் முன்னரே நிகழ்ந்த பின் ஆன்மா என்று சொல்லப்படும் ஆவி ஆல்லது உயிர் மாந்தி அல்லது குளிகனால் அடுத்த் பிறவியில் எடுக்கும்வரை அதை நல்ல ஆன்மாகவோ அல்லது தீய் சக்தியாகவோ குட்டிசாத்தான் மூலம் நிர்ணயிப்பதோடு, இறந்த உடலை நல்லடக்கம் செய்யும்வரை பாதுகாக்கிறது அல்லது அனாதை பினமாக ஆக்குகிறது.
மாந்தியை சாந்தப்படுத்த என்ன செய்வது?
இறந்தவர்களுக்கு உரிய மரியாதை செய்வது, அனாதை பிணத்திற்கு நல்லட்டக்கம் தருவது, என்று பலவகையில் நன்மை செய்து அவன் அருள் பெறலாம்.
அதாவது சுருக்கமாக சொன்னால் எமதர்ம ராஜாவிற்கு அவர் உதவியாளர் போல, ஆயுள் பகவானுக்கு உதவியாளர் என்று கூட சொல்லலாம்.
மாந்தி லக்னத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் அழகற்று இருப்பார்கள். ஆனால் மிக அறிவாளிகள். மாந்தி 1, 5, 9 விலே அல்லது அப்பா சனி, தாத்தா சூரியன், செவ்வாய் உடன் சேர்ந்திருப்பது விஷேசம்.
இதனை இவர் செய்தாலும், சித்தப்பக்கள் இராகு, கேது, மற்ற கிரகங்களிம் செயல்பாட்டை ஊக்குவிப்பதால், இதனை கிரியா ஊக்கி என்று சொல்வதுண்டு!
மாந்தி அல்லது குளிகனை மற்ற சேர்ந்திருக்கும் கிரகங்கள வைத்தே அதன் பலாபலன் நிர்ணயிக்கலாம்! செய்யும் நல்லது கெட்டதும் அதன் மூலமே!
தீர்க்க ஆயுளை உங்களுக்கு மாந்தி பகவான் அருளட்டும்!