
உலகில் கோடிக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் ஒரு சில மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்...
அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்று தான் கருவேலம்!
இதன் அனைத்து பகுதிகளும் பயன் தரக்கூடியது!
முக்கியமாக இந்த மரத்தின் பிசின்!
பிசினை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வர வீரியம் அதிகரிக்கும்...
பற்கள் கெட்டியாக கருவேலம் கொட்டைகளையும்,பாதாம் கொட்டையின் தோலையும் கருக்கி உப்புடன் கலந்து பல் தேய்த்து வர மிகுந்த பலன் கிடைக்கும்...
இதன் கொழுந்தை பாலில் கலந்து சாப்பிட அஜீரண கோளாறு நீங்கும்...
இந்த மரத்தின் பிசினில் கால்சியம், மக்னிசியம், பொட்டாசியம், சிறிதளவு மாலிக் அமிலம், சர்க்கரை சாம்பல் பொருட்களும் உள்ளன...
முடிந்த அளவு கருவேல மூலிகையை ஏதாவது ஒரு வகையில் உடலுக்கு கொடுப்பது சிறப்பானது...!