Saturday, December 28, 2019

கிரகங்கள் வக்கிரம் அடைவதை பற்றி யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. பல ஜோதிடர்களிடமிருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் தனது அனுபவங்களாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பல ஜோதிடர்களும் தங்களுக்கு அனுபவங்களுக்கேற்பவே ஒருவருக்கொருவர் முரண்பட்ட தங்களது கருத்துக்களையே இதுவரை கூறியுள்ளனர்.

இவ்வாறுதான் தற்போது நானும் கூறியுள்ளேன். இங்கே ஒரு வித்தியாசமாக மூலநூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களோடு எனது நிலையான அனுபவத்தையும் கூறியுள்ளேன்.

இதுதொடர்பாக உங்களது அனுபவத்தையும் கருத்தையும் தாராளமாக பதிலிடலாம்.

பல கிரகங்கள் வக்கிரம் பெற்றவர்களே பிரதமர்களாகவும், முதல்வராகவும், அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்துள்ளார்கள்.
வேண்டுமென்றால் VVIP களின் ஜாதகங்களை தேடி ஆராய்ந்து பாருங்கள். புதன் வக்கிரம் பெற்றவர் புகழ்பெற்ற ஜோதிடராகவும்,கவிஞராகவும், விஞ்ஞானியாகவும், சாப்ட்வேர் துறை வல்லுனராகவும் இருப்பதை காண்கிறோம்.

சுக்கிரன் வக்கிரம் பெற்றவர் கலைத்துறையில் உச்சநிலையில் இருப்பதை பார்க்கிறோம்.

உலகிற்கு விம்சோத்திரி தசாமுறையை கொடுத்த பராசர முனிவரும் வக்கிர கிரகங்கள் காலம் தாழ்த்தி பலன்தரும் என்றுதான் கூறியுள்ளார். வக்கிர கிரகங்கள் எதிர்பலனை செய்யும். அதாவது வலு குறைந்த கிரகங்கள் அதிகமாக வலுவடையும். அதாவது உச்சத்தை தவிர மற்ற கிரகங்கள் வலு குறைந்த கிரகங்களே. இவை வலுவடையும். உச்ச கிரகங்களுக்கு வக்கிரமடைந்தால் நீச பலமடையும். இது சனி செவ்வாய்க்கு சில நேரம் நல்லதுக்கூட.( உச்சநிலையில்) அது சில இடங்களில் மட்டுமே பலன்தரும்.

மகாகவி காளிதாசர் வக்கிரம் ஆன கிரகங்கள் உச்சத்திற்கு சமமான பலம் தரும் என்கிறார். ( நீசக்கிரகம் உட்பட)
இதற்கு விதிவிலக்கையும் அவரே கூறியுள்ளார்.
அந்த ஒரே ஒரு விதிவிலக்கு உச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் நீசபலனை தருமென்று தெளிவாகத்தானே கூறியுள்ளார்.

சாராவளியில் மன்னர் கல்யாணவர்மரும் ,பலதீபிகை ஆசிரியர் மந்தரேஸ்வர முனிவரும் வக்கிர கிரகங்கள் அதிகமாக பலமடைவதாகத்தான் கூறியுள்ளனர்.
அதனால் கவலை வேண்டாம்.

தீமை செய்யும் பாவக்கிரகங்கள் மட்டும் வக்கிரம் ஆகக்கூடாது. ஏனென்றால் வக்கிர கிரகங்கள் அதிக பலம் பெற்று தீயபலனை அதிகமாக தருவார்கள். ஆட்சி,நட்பு போன்ற நிலையில் உள்ள பாவக்கிரகங்கள் வக்கிரம் ஆனால் அதிக பலம் பெற்று தனது தீயக்காரகத்தை அதிகரித்து தரும்.

பல தோசங்கள் நீங்கி யோகங்கள் பெறக்கூட வக்கிரம் காரணமாக இருக்கும்.( முடக்கு,திதிசூன்யம் போன்ற சில்லரை தடைகள்)

வக்கிரமான கிரகம் காலம் தாழ்த்தி அதிக பலன்களையே தரும்.( அது நல்ல பலனா தீயபலனா என்பதைதான் ஜோதிடர்கள் ஆதிபத்திய காரகத்துவத்தை பொருத்து கண்டுபிடிக்க வேண்டும்.

ஏன் கிரகங்கள் வக்கிரம் ஆனால் அதிபலம் பெறுகின்றன?

உச்சக்கிரகத்தை தவிர மற்ற கிரகங்கள் வக்கிரம் ஆவதால் உச்சக்கிரகத்திற்கு சமமான வலிமையை பெறுகின்றன. அதாவது உச்சம் 100 மதிப்பெண்,மூலத்திரிகோணம்,80 மதிப்பெண், ஆட்சி 50 மதிப்பெண்,நட்பு 40 மதிப்பெண் ,பகை 20 மதிப்பெண்கள், நீசம் 0 மதிப்பெண்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது வக்கிரம் ஆன கிரகங்கள் தனது எதிர்நிலையான 100 மதிப்பெண்களை அடையும். அதாவது வலுவற்ற கிரகங்கள் வலுவடையும்.

ஆனால் உச்சம் பெற்ற கிரகங்கள் ஏற்கனவே 100 சதவீதம் வலுவுடன் இருப்பதால் அதன் எதிர்நிலையான பலமற்ற நிலையான நீசத்திற்கு சமமான வலிமையை அடையும்.

இப்போது புரிந்திருக்கும்.

ஏன் காளிதாசர் வக்கிரம் பெற்ற கிரகங்கள் உச்சத்திற்கு சமமான வலிமையை அடையும் என்று கூறியுள்ளார் என்று.

இதைதான் மகரிஷி பராசர முனிவர் வக்கிரம் பெற்ற கிரகம் எதிர்மறையான பலன்களை காலம் தாழ்த்தி செய்யும் என்கிறார்.

ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரம் ஆனால் என்ன பலன் தருவார். இதுதான் தற்போது பலரும் என்னிடம் கொண்டுள்ள கேள்வி.

அதாவது சுபக்கிரகங்கள் வக்கிரம் பெற்றால் அதிகமான வலிமையை பெற்று தனது காரகத்துவத்தை வலிமையாக தருவார்கள்.

குரு ஆட்சியாகி வக்கிரமானால் உயிர்காரகத்துவமாட புத்திரகாரகத்துவத்தை தாமதப்படுத்துவார். செல்வத்தை தருவார். மார்க்,பாதகாதிபதியாக குரு இருந்து வக்கிரமானால் உயிர்காரகத்துவமான மரணம் தவிர்க்கப்படும்.

சுக்கிரன் வக்கிரமானால் தனது உயிர்காரகத்துவமான மனைவி,கணவனை பாதிப்படைய செய்து வண்டி,வாகனம்,வீடு தரும்.

புதன் வக்கிரமானால் தனது உயிர்காரகத்துவமான மாமன் வகையறாக்களை கெடுத்து மற்ற காரகபலன்களான ஜோதிடம்,விஞ்ஞானம்,கணிதம் போன்றவற்றையும் ஆதிபத்தியத்தையும் வலிமையாக தருவார்.

சனி,செவ்வாய் உச்சமாகாமல் வக்கிரமானால் காரகரீதியில் தீயபலன் தருவார்கள் என வடமூல நூலான சாராவளி தெளிவாகவே கூறிவிட்டது.

சரி.
வக்கிரகிரகங்கள் அதிபலமடைந்து தனது உயிர்காரகத்தை இழக்கின்றன அல்லது பாதிக்கின்றன. ஆனால் பொருள்காரகத்துவத்தையும் ஆதிபத்திய பலனையும் அதிகமாக வழங்குகின்றன என்றுக்கூறி முடிக்கிறேன்.