Monday, December 30, 2019

கோயிலில் வணங்கும் முறைகள்:📖🎑 🚩🧘‍♂



⚜#கோயிலுக்கு_செல்லும்போது அக்கோயிலின் ஸ்தல வரலாறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

⚜ உடல், ஆடை,மனம் எல்லம் தூய்மையாக இருக்க வேண்டும்.

⚜ பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும்

⚜ மூடியிருக்கும் கோயிலில் வெளியிலிருந்து சாமி கும்பிட்டுக் கூடாது. வாகணங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.

⚜வெறும் கையுடன் கோயிலுக்கு செல்லக்கூடாது. பழம், பூ, எண்ணெய், காணிக்கை இதில் எதாவது ஒன்றை வலது கையில் கொண்டு செல்ல வேண்டும்.

⚜தர்மம்: முதலில் கோயிலுக்கு வெளியில் பிச்சையிட்டு பின் கோயிலுக்குள் செல்ல வேண்டும். கோயிலில் வணங்கி வெயிலியில் வரும் பொது பிச்சையிடக் கூடாது.

⚜ கை, கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும்.

⚜கோபுர தரிசனம்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம், முதலில் கோயில் கோபுரத்தை கண்ணராத் தரிசிக்கவும். ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளையும் குவித்தும். பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்கவேண்டும்.

⚜ அஞ்சிநேயர், அதிகார நந்தி போன்ற காவல் தெய்வங்களை வணங்கிவிட்டு கோவிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

⚜கொடி மரம்: அதன் பிறகு, கொடி மரத்தின் பக்கத்தில் சென்று. கொடி மரத்திற்கு வலது பக்கமாக, தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். வேண்டுதல்களை கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். கொடி மரம் இல்லாத கோவில்களில் பிள்ளையாரை துதித்து விட்டு பிரகாரத்துக்குள் நுழையா வேண்டும்.

⚜பலிபீடம்: பலி பீடத்திற்கு அருகில் சென்று வணங்கி நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியும் என்னும் ஆறு தீய குணங்களை பலி கொடுத்ததாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

⚜ அம்மன் கோயில் பலி பீடத்தில் சிறிது உப்பு, மிளகைக் கொட்டி பிராத்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம். உரு எனப்படும் மனித உருவ பொம்மைகள் மற்றும் கண், கை, கால்கள் உடல் உறுப்பு பொம்மைகளை காணிக்கை அளித்தால் நோய் நிவாரணம் பெறும்.

⚜பலி பீடத்தை குறைத்தது மூன்று முறை அல்லது ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

⚜தெய்வ வாகனம்: அடுத்தப்படியாக இருப்பது உள்ளே உள்ள மூலவருக்குரிய வாகனம்.

⚜ சிவபெருமான் என்றல் நந்தி,

⚜பெருமாள் என்றல் கருடன்,

⚜அம்பாள் என்றல் சிம்ம வாகனம் இவை எல்லாம் உள்ளே உள்ள மூர்த்தியை நோக்கியவாறு இருக்கும். நாம் கடவுளையும் வாகனத்தையும் சேர்த்தே வழிபட வேண்டும்.

⚜ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது.

தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம்.

⚜தெய்வ வாகனங்களின் வாலை பக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

⚜கன்னிமூலை கணபதி: கன்னிமூளையுள்ள விநாயகரை முதலில் ஒரு பிரதட்சணம் செய்து வணங்க வேண்டும் பிள்ளையாரை வனங்கும்போது
தோப்புகரணமிட்டு
, நெற்றி பொட்டுகளில் லேசாகக் குட்டிக் கொள்ள வேண்டும்.

இதனால் காது மற்றும் முக்கிய ஜீவப் புள்ளிகள் தூண்டப்பட்டு, புத்துணர்வு கொள்வதாக விஞ்ஞானம் சொல்கிறது. விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காயைப் பெண்கள் உடைக்கக் கூடாது.

⚜பிரகாரங்களை வலம்வரம்போது: வேகமாக நடக்கக்கூடாது. கர்ப்பிணிப்பெண் தலையில் எண்ணெய்க் குடம் ஏந்தி நடந்தால் எப்படி அடிமேல் அடி வைத்து நடப்பார்களோ அதுபோல மெல்ல நடக்க வேண்டும்...🚩🧘‍♂

⚜ திருக்கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்திலும், மூடியிருக்கும் நேரத்திலும், திருவிழாவில் சுவாமி உலா வரும் நேரத்திலும் கோவிலில் தெய்வத்தை வணங்குவதோ, பிரதட்சணம் செய்வதோ கூடாது.

⚜அபிஷேகம் நடந்தால் பிரகாரத்தை சுற்ற கூடாது, அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

⚜ விநாயகருக்கு ஒரு பிரதட்சணமும்,

⚜லிங்கம், முருகன், தக்ஷிணாமூர்த்தி, அம்மன் போன்ற மூர்த்திகளுக்கு மூன்று பிரதட்சணமும்,

⚜ விஷ்ணுவுக்கும் தாயாருக்கும் நான்கு பிரதட்சணமும்,

⚜அரச மரத்திற்கு. ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும்.

மதியத்திற்கு மேல் அரச மரத்தை சுற்ற கூடாது. சுற்றி வரும் போது பலி பீடத்துக்கு வெளியே சுற்றவும். காலைப் பிரதட்சணம் நோயைத் தீர்க்கும். மத்தியப் பிரதட்சணம் விருப்பங்களை நிறைவேற்றும். மாலை பிரதட்சணம் பாவங்களை நாசம் செய்யும். இரவு பிரதட்சணம் மோட்சம் தரும். பிரதட்சனை முறை கடிகார முள் சுற்றும் திசையில் இருக்க வேண்டும்.

⚜ பிரதோஷ நாளன்று மட்டும் லிங்கத்தை வலமும் இடமும் மாறி மாறி வந்தி வழிபட வேண்டும்.

⚜துவரபலகர்கள்: மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து. துவாரபாலகர்களின் முன் சென்று, இறைவனை தரிசிக்க அனுமதி தந்து அருளுங்கள் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். 🚩🧘‍♂

சிவன் கோயிலாக இருந்தால் முதலில் சிவனையும் பிறகு அம்பாளையும் வணங்க வேண்டும். பெருமாள் கோவிலில் முதலில் மகாலக்ஷ்மியை வணங்கி, பிறகு பெருமாளை வணங்க வேண்டும்.

⚜மூலவரை வணங்குதல்: பெருமாளை துளசியால் அர்ச்சித்து வணங்கும்போது கண்களை மூடி நிற்காமல் முதலில் பாதம், அபய, வரத, ஹஸ்தங்கள், நேத்திரம், முகம், ஆயுதங்கள் என ஓவ்ஒரு பாகமாகக் கூர்ந்து கவனித்து, இறைவனின் உருவத்தை கீழிருந்து மேலாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

⚜அம்பாள் என்றல், முதலில் கண்கள், மாங்கல்யம், அபய, வரத, ஹஸ்தங்கள், அலங்காரம், பாதம், என மேலிருந்து கீழாக தரிசித்து. தாயாரைப் பிரியதோடு பார்க்கும் குழந்தை போல மனம் உருகி தரிசிக்க வேண்டும்.

⚜ நாக சிலைகள், புற்றும், இருக்கும் ஸ்தலமானால், முதலில் அவற்றை வணங்கிவிட்டு அம்மனைத் தொழ வேண்டும்.

⚜பிரசாதம்: அர்ச்சனை செய்து, ஆரத்தி காட்டியதும் பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும். பிரசாதம், தீர்த்தம், சடாரி, நைவேத்தியம் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு வருவது நல்லது.

⚜விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை கோயில்களின் தூண்களில் பூசுவதோ, திர்தத்தை தரையில் சிந்த விடுவதோ கூடாது.

அதனால் தான் தீர்த்தம் பெரும் சமயம் கைகளுக்குக் கீழே புடவையோ அல்லது மேல் துண்டையோ வைத்துக் கொள்கிறோம்.

⚜நவக்கிரகங்கள்: பெருமாள் கோவில்களில் நவக்கிரக வழிபாடு இல்லை.

⚜ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.

⚜சிவன் கோவில்களில் நவக்கிரங்களுக்கு தனி சந்நிதி இருக்கும்.

மூலவரைத் தரிசித்து வெளியே வந்ததும், நவக்கிரக தரிசனம் செய்து ஒன்பது முறை பிரதட்சணம் செய்வது நலம்.
சண்டிகேஸ்வரர்: சிவன் கோயில்களில், கடைசியாக வணங்க வேண்டியவர் சண்டிகேஸ்வரர் ஈசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரை தரிசித்து வழிபாடு புரத்தியடையும்படி வேண்டி கொள்ள வேண்டும்.

சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ தியானத்தில் இருப்பதால் அவர் சந்நிதியில் மூன்று முறை வலது கையால் இடது கை நடுவில் தடவி வணங்க வேண்டும்.

⚜கோயில்களில் செய்யக் கூடாதவை:

⚜ கோயிலை அசுத்தம் செய்யக் கூடாது. எச்சில் துப்பக்கூடாது, தூங்கக் கூடாது,

⚜ நம்மைவிட சிறியவர் கையிலிருந்து விபூதியை எடுத்து நாம் தரிக்கக் கூடாது.

⚜ கோயிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது,

⚜ மற்ற கோயில்களை ஒப்பிட்டு பேசுதல் கூடாது. சத்தமாக சிரிக்க கூடாது, மொபைலில் பேசவும் கூடாது.

⚜கோயில்களில் இருந்து வீடு திரும்பும்போது: சிவன் கோயிலாக இருந்தால் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து சிவகனங்களை அங்கேயே விட்டு செல்ல வேண்டும்.

⚜பெருமாள் கோயிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் சென்றால் லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம்.

⚜பிரதான துவராபைகர்களை மறுபடியும் மணசீகமாக சேவித்து உத்தரவு பெற்றுக் கொண்டு, மறுபடியும் கொடி மரத்திற்கு எதிரில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வெளியில் வர வேண்டும்.

⚜நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது. வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாது , கோவிலை விட்டு வீட்டினுள் அப்படியை செல்ல வேண்டும்.

⚜ அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் வேண்டிய வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும் .இதுவே கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள் ஆகும்.🔯 🚩🔯