Friday, December 20, 2019

கடை,வீடுகளில் திருஷ்டி கழிக்க..,


*மாலை வேலையில் வீடு அல்லது கடையின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

* செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும்.

* வீடு, கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.இது ஓர் அற்புதமான திருஷ்டி பாதுகாப்பு மற்றும் நிவர்த்தி பரிகார அமைப்பாகும்.

* ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்து கொள்ள வேண்டும்.இது வீட்டிற்கு சுபமங்கள சக்திகளை அளிப்பதோடு தீவினை எதிர் மறைசக்திகளை இல்லாமல் செய்கிறது.