Sunday, December 29, 2019

சரணாகதி_எப்படி_செய்ய_வேண்டும்?



மகாபாரத யுத்தம் உறுதியான நிலையில் கிருஷ்ணரிடம்இந்த உதவி வேண்டும் என்று துரியோதனன் பகவான் கிருஷ்ணரின் வீட்டிற்கு சென்றார் அந்த நேரத்தில் பகவான் உறங்கிக் கொண்டிருப்பது போல் செய்து கொண்டிருந்தார்

அவருடைய கால் அருகில் ஒரு ஆசனமும் அவருடைய தலை அருகில் ஒரு ஆசனமும் இருந்து
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கால் அருகில் அமர விரும்பவில்லை எனவே அவருடைய தலை அருகில் போய் அமர்ந்து கொண்டான்

அடுத்தது அர்ஜுனன் வந்தான் அவன் பகவான் திருவடியின் பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டான் பகவான் கண்விழித்தவுடன் அர்ஜுனனை முதலில் பார்த்தார் எதற்காக வந்தாய் என்ன வேண்டும் என்று கேட்டார்

துரியோதனன் சொன்னான் நான் தான் முதலில் வந்தேன் பகவான் கூறினார் நான் முதலில் பார்த்தது அர்ஜுனனை தான்

யார் பகவானின் திருவடியில் அமர்கிறார்கள் அவர்களைத்தான் பகவான் காப்பார்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைவிட உயர்ந்தவனாக கருதுபவர்கள் அவருக்கும் அவருடைய பக்தர்களுக்கு தொந்தரவு செய்பவர்களை அவர் கண்டுகொண்டதே இல்லை

அடுத்தது பகவான் கூறினார் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகின்றது

ஒன்று என்னுடைய 7 அக்ஷௌரணி படைகள் மற்றொன்று நான் மட்டும் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ஒருபுறம் இருப்பேன் இதில் எது வேண்டும் என்று கேட்டார்

அர்ஜுனன் பகவானை தேர்ந்தெடுத்தான் பகவான் இருக்கும் இடத்தில் அசாதாரணமான வலிமை நியாயம் செல்வம் மற்றும் அனைத்துவிதமான வீரர்களும் இருக்கும் என்பது பகவத் கீதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சரணடைந்தவரை எந்த நிலையிலும் தவிக்க விட்டதே இல்லை

அவர்களுக்கு எல்லாவிதமான நலன்களை வழங்கினார் எனவே தான் பகவான் பக்தர்கள் பகவானை மட்டுமே சரணடைகிறான்

சரணடைதல் என்பது பகவான் கிருஷ்ணரிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி அவர் மட்டுமே தன்னைக் காப்பார் என்பது போல் இருப்பதாகும்

ஒரு பச்சைக்குழந்தை தன் தாயைத் தவிர வேறு ஒன்றும் அறியாதது போல

முழுமுதற் கடவுள் பகவான்
கிருஷ்ணரிடம் சரணடையும் முறை ஹரி–பக்தி–விலாசத்தில் (11.676) விவரிக்கப்பட்டுள்ளது:
சரணடைதலில் 6 லக்ஷணங்கள்

ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:
ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விஷ் வாஸோ
கோ ப்த்ருத்வே வரணம் ததா:
ஆத்ம–நிக்ஷேப-கார்பண்யே
ஷட்-விதா ஷரணாகதி.

1.ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப: -- கிருஷ்ண பக்திக்கு சாதகமானதை மட்டும் ஏற்க வேண்டும்

2.
ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்--கிருஷ்ண பக்திக்கு பாதகமானதை விட்டுவிட வேண்டும்

3.ரக்ஷிஷ்யதீதி விஷ் வாஸோ --பகவான் கிருஷ்ணர் மட்டுமே தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

4.கோப்த்ருத்வே வரணம் ததா: -- பகவான் ஸ்ரீகிருஷ்ணரை மட்டுமே தன்னுடைய பாதுகாவலனாக நினைக்க வேண்டும்

5.ஆத்ம–நிக்ஷேப- பகவான்ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னையே முழுமையாக ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்
ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார்.

6.கார்பண்யே --தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றதிற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் அவன் நினைக்க வேண்டும்.

ஷட்-விதா ஷரணாகதி.-- இந்த 6 தான் சரணாகதியின் லக்ஷணம்

சரணாகதி என்றால்,பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய பக்தித் தொண்டிற்கு இறுதியில் தன்னை வழிநடத்தக்கூடிய மதக் கொள்கைகளை ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்தில் தன்னுடைய நிலைக்கு ஏற்ற குறிப்பிட்ட கடமையை ஒருவன் நிறைவேற்றலாம், இருப்பினும், அவன் தனது கடமையைச் செய்து கிருஷ்ண உணர்வின் நிலைக்கு வரமாட்டான் என்றால், அவனது செயல்கள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன.
கிருஷ்ண உணர்வின் பக்குவநிலைக்கு ஒருவனைக் கொண்டுச் செல்லாத எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்.

எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் கிருஷ்ணர் தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார்.

தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றதிற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் அவன் நினைக்க வேண்டும்.

பூரண கிருஷ்ண உணர்வுடன் பகவானின் பக்தித் தொண்டில் ஒருவன் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட உடனேயே, அவன் ஜட இயற்கையின் எல்லா களங்கங்களிலிருந்தும் விடுபடுகின்றான். ஞானத்தை விருத்தி செய்தல், யோக முறையின் படி தியானம் செய்தல் போன்ற பற்பல தூய்மைப்படுத்தும் வழிகளும் தர்மங்களும் இருக்கின்றன என்றாலும், கிருஷ்ணரிடம் சரணடைபவன் பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணரிடம் எளிமையாக சரணடைதல்,v அவனை தேவையற்ற கால விரயத்திலிருந்து காக்கும். இதன் மூலம், அவன் உடனடியாக எல்லா முன்னேற்றத்தையும் அடைந்து, எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.