Monday, December 30, 2019

இதுதான் இறைவன் இயங்கும் நமது மனித உடல்*

*

*70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள் (தனிமங்கள்)*

*1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்*
*2. கார்பன் 16 கிலோ கிராம்*
*3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்*
*4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்*
*5. கால்சியம் 1.0 கிலோ கிராம்*
*6. பாஸ்பரஸ் 780 கிராம்*
*7. பொட்டாசியம் 140 கிராம்*
*8. சோடியம் 100 கிராம்*
*9. குளோரின் 95 கிராம்*
*10. மக்னீசியம் 19 கிராம்*
*11. இரும்பு 4.2. கிராம்*
*12. ஃப்ளூரின் 2.6 கிராம்*
*13. துத்தநாகம் 2.3 கிராம்*
*14. சிலிக்கன் 1.0 கிராம்*
*15. ருபீடியம் 0.68 கிராம்*
*16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்*
*17. ப்ரோமின் 0.26 கிராம்*
*18. ஈயம் 0.12 கிராம்*
*19. தாமிரம் 72 மில்லி கிராம்*
*20. அலுமினியம் 60 மில்லி கிராம்*
*21. காட்மியம் 50 மில்லி கிராம்*
*22. செரியம் 40 மில்லி கிராம்*
*23. பேரியம் 22 மில்லி கிராம்*
*24. அயோடின் 20 மில்லி கிராம்*
*25. தகரம் 20 மில்லி கிராம்*
*26. டைட்டானியம் 20 மில்லி கிராம்*
*27. போரான் 18 மில்லி கிராம்*
*28. நிக்கல் 15 மில்லி கிராம்*
*29. செனியம் 15 மில்லிகிராம்*
*30. குரோமியம் 14 மில்லி கிராம்*
*31. மக்னீசியம் 12 மில்லி கிராம்*
*32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்*
*33. லித்தியம் 7 மில்லி கிராம்*
*34. செஸியம் 6 மில்லி கிராம்*
*35. பாதரசம் 6 மில்லி கிராம்*
*36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்*
*37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்*
*38. கோபால்ட் 3 மில்லி கிராம்*
*39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்*
*40. வெள்ளி 2 மில்லி கிராம்*
*41. நியோபியம் 1.5 மில்லி கிராம்*
*42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்*
*43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்*
*44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்*
*45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்*
*46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்*
*47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்*
*48. தால்வியம் 0.5 மில்லி கிராம்*
*49. இண்டியம் 0.4 மில்லி கிராம்*
*50. தங்கம் 0.4 மில்லி கிராம்*
*51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்*
*52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்*
*53. வாளடியம் 0.11 மில்லி கிராம்*
*54. தோரியம் 0.1 மில்லி கிராம்*
*55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்*
*56. சமாரியம் 50 மில்லி கிராம்*
*57. பெல்யம் 36 மில்லி கிராம்*
*58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.*

*மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.*

*மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது.*

*கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும் ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.*

*உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம்.*

*இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.*

*உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.*

*விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை.*

*தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.*

*நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.*

*இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)*

*நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!*

*உடலின்மொழி:*

*1. உடல் - உணவை கேட்கும் மொழி - பசி*

*2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - தாகம்*

*3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி*

*4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.*

*5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்*

*6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை*

*7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி*

*8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி*

*9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி*

*10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை*

*11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்*

*12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்*

*13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்*

*எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.*

*உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.*

*நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.*

*நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.*

*அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.*

நன்றி 🙏🙏🙏