Thursday, December 5, 2019

நாய்_ஊளையிடுவது என்பது நம்முடைய மரபில் ஏதோ ஒரு தவறு நடக்கவிருப்பதை முன்னரே தெரியப்படுத்தும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.



தெருவில் நாய் ஊளையிட்டால் அதை விரட்டிவிடும் சம்பவங்களை கிராமங்களில் இன்றைக்கும் காணலாம்.

பகீரதன் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டுவருகிறான். கங்கை நேராக பூமிக்கு வந்தால் அதன் வேகத்தால் பேராபத்தை விளைவிக்கும் என்று சிவன் தன் முடியில் ஒன்றை எடுத்து அதன் வழியே அதை இறக்கி அதன் வேகத்தை குறைக்கிறார் இதனால் பார்வதி கோபமடைகிறாள் என்பதெல்லாம் ஏற்கனவே தெரிந்த கதை.

இந்த சிற்பங்களையும் பல கோயில்களில் கடந்து வந்திருக்கிறோம்..But why Pallavas are always "The Best" என்றால் ஒரு சம்பவத்தை சாதாரணமாக காட்சிபடுத்துதல் என்பது எல்லோரும் செய்வதே ஆனால் அந்த சம்பவத்தை உயிரோட்டமக அதை கண்முன் கொண்டு வருவது பல்லவ சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதம். திரும்பவும் இந்த நாய் கதைக்கு வருவோம்.

ஆர்ப்பரித்துக் கொண்டு வானத்தில் இருந்து சுனாமி போல் இறங்கிக் கொண்டிருக்கும் கங்கையின் வருகையை உணர்ந்த நாய் பூமியில் ஏதோ அசம்பாவிதம் நடைபெறப் போவதாய் நினைத்து ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது!! இதைவிட இந்த நிகழ்வை அழகாக வடிக்க முடியுமா!!

இந்த நாய் வடிவம் நட்சத்திரங்களுடன் ஒப்பிடப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

1250 years old
Mathangeswarar temple,
Kanchipuram