இதோ வாழ்வில் எப்போதாவது தோல்வி ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிலருக்கு எப்போதும் தோல்விகளும், துரதிர்ஷ்டங்கள் மட்டுமே ஏற்படுகின்றன. அவற்றை போக்கும் அற்புத சுலோகம் இதோ வாழ்வில் பலரும் பல நேரங்களில் துரதிருஷ்டங்களும், தோல்விகளையும் மட்டுமே சந்திக்கின்றனர். இதனால் இவர்கள் மிகவும் மன விரக்தி அடைகின்றனர். மனித உறவுகளில் எதிர்பார்ப்பில்லாத அன்பு தரும் ஒரே உறவு தாய் உறவு தான். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஜகன்மாதாவாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி இருக்கிறாள். அந்த அங்காளபரமேஸ்வரி தேவியின் ஸ்லோகத்தை துதிப்பதால். நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம் அங்காளபரமேஸ்வரி ஸ்லோகம்
ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அங்காள பரமேஸ்வரியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து வணங்குவதால் உங்கள் வாழ்வில் துரதிஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் ஒவ்வொன்றாக கிடைக்க பெறுவீர்கள். பெண் சக்தியே உலகில் உயிர்களை தோன்ற செய்வதோடு, அண்ட சராசரங்களையும் இயங்க செய்கிறது. அந்த சக்தியை அம்மன் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். உண்மையான பக்தர்களுக்கு நன்மைகளையும், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை அழிக்கும் பராசக்தியாக இருக்கிறார் அம்மன். அதிலும் சாந்த குணம் கொண்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் அருளும் தெய்வமாக இருக்கிறாள்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...