கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, April 10, 2019
நரம்பு_தளர்ச்சி_நீங்க...
#நரம்பு_தளர்ச்சி_என்றால்_என்ன?
நரம்புத்தளர்ச்சி என்பது சரியான வார்த்தை இல்லை. நரம்புகள் தளர்வது இல்லை. நம் மூளை ஒரு ஜெனரேட்டர் மாதிரி, மூளையிலிருந்த கட்டளைகளைச் செய்திகளாக எடுத்துச் செல்லும் ஒயர்களாகச் செயல்படுவது இந்த நரம்புகள்தான். மயலின் என்னும் வேதிப்பொருள் சூழ்ந்த லட்சக்கணக்கான சின்னச் சின்ன நரம்புகள் சேர்ந்து ஒரு பெரிய நரம்பாக தசைகளுக்குள் ஊடுருவி இருக்கும். எப்பொழுது எல்லாம் மூளையின் கட்டளைகள் பெரிய நரம்புகளுக்குப் போய்ச் சேருவதில் தொய்வு ஏற்படுகிறதோ, அதை நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தொய்வு ஏற்படும் பொழுது, பாதங்களில் கட்டை விரல்கள் உணர்ச்சியற்று மரத்துப் போகும். செக்ஸில் நாட்டம் இருக்காது. சில பேருக்கு கைகள் நடுங்குவது, வேகமாகச் செயல்பட முடியாமல் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வுகள் சர்வ சாதாரணமாகத் தோன்றும்.
பாலியலில் ஈடுபாடு மிக்கவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருமாமே?
நூறு சதவிகிதம் கிடையாது. மனநிலை, சூழ்நிலை, அதிகமான ஈடுபாடும், நாட்டமும்தான் உடலின்பத்துக்குக் காரணம். இதனால், நரம்புத் தளர்வு வராது.
ஏற்கெனவே நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் மிக அதிகமாக உடல் இன்பத்தில் ஈடுபட்டால் நரம்புப் பிரச்னைகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.
இளைஞர்களும், மாணவர்களும் கூட கைநடுங்குதல், பதற்றம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுவது ஏன்?
முதல் காரணம் புரோட்டீன். வைட்டமின்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதும் முக்கியக் காரணம். மேலும், வாழ்க்கையில் பல நெறிமுறை பிறழ்ந்த மாற்றங்கள், நிறைய சறுக்கல்கள், தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் கைநடுக்கம் வரலாம்.
நரம்புத் தளர்ச்சி வராமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். எப்போதும் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக அரை வயிற்றுக்குச் சாப்பிட வேண்டும்.
எண்ணெய் அறவே ஒழிக்கக் கூடாது. ஆலிவ் ஆயில், கார்ன் ஆயில் உபயோகிக்கலாம். மீன் அடிக்கடி சாப்பிடலாம். இது வலுவைத் தரும். சிக்கன், மட்டனை கூடுமானவரை தவிர்த்து விடலாம். வானவில் நிறங்கள் அடங்கிய பழங்கள், காய்கள் சாப்பிட்டால் வாழ்வில் நடுக்கம் ஓடிப்போகும். கீரைகள், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, செர்ரி, தக்காளி, ஆரஞ்சுப் பழங்கள், முளைகட்டிய தானியங்களையும் சேர்த்துக் கொண்டால் நரம்புத் தளர்ச்சி வருவதை அறவே ஒழித்து விடலாம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#சர்க்கரை_நோயில்_இருந்து_பாதுகாக்க_இந்த_இலை_பொடி_போதும்...
முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டு மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முருங்கை உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.
முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இது புண்கள் மற்றும் இரத்தம் வெளியேறுவதை வேகமாக குறைக்க உதவுகிறது.
முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.
முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாகக்க உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
முருங்கை இலையின் பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ள விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆனது, மன வளம், நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது.
முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.
முருங்கையில் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமீனோ ஆசிட்கள் உள்ளன. இதில் போதுமான அளவு விட்டமின் ஏ,சி, மற்றும் இ உள்ளது. மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.
நீங்கள் முருங்கை இலை பவுடரை டீ ஆக குடிக்கலாம். இது மிக சுவையானதாக இருக்கும். இந்த பவுடரை தினமும் அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவிற்கு குடிக்கலாம்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...