கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, April 8, 2019
மனஅழுத்தத்தின் #வகைகள்
திடீரென மிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் மன அழுத்தத்தை அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute Stress) என்கிறார்கள்.
இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய்விடும்.
தொடர் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்த்த்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் (Episodic acute stress) என்கிறார்கள். அதிகப்படியான வேலை, ஏராளமான பணிகள், தினமும் தாமதமாய் வருவதால் வரும் பிரச்னை, அவசரம் போன்ற தொடர் காரணங்களால் வருவது இது.
இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்ப சூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை க்ரோனிக் ஸ்ட்ரெஸ் (Chronic Stress) என்று அழைக்கிறார்கள்.
ட்ராமிக் ஸ்ட்ரெஸ் (Traumic Stress) என்பது மற்றொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது.
மன அழுத்த நோயை அதன் குணங்குறிகளைப் பொறுத்து அற்ப மனநிலையழுத்தம் (Mild disorder), நடுத்தர மனநிலை அழுத்தம் (Moderate disorder), பாரிய மன அழுத்தம் (Severe depressive disorder) என பிரிக்கலாம்.
பாரிய மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்கள் வாழ்க்கை அர்த்தமில்லாதது (hopeless) போன்ற எண்ணங்களுடன், தற்கொலை செய்யும் மனநிலையிலும் (suicidal thoughts) காணப்படுவார்கள். இத்துடன் தேவையில்லாமல் குற்ற உணர்வு (unreasonable guiltiness) ஏற்படுபவர்களயும், ஐயோ நான்தான் இதற்குக் காரணமென்றும், சிறிய நிகழ்வுகளுக்கும் தன்னையே நொந்து (self blame) கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.
தவிர தன்னிடம் ஒன்றுமே இல்லை என்ற வெறுமை உணர்வுடன் காணப்படுவார்கள்.
மன அழுத்தத்தை நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தம் எனவும் பிரிக்கலாம். சைக்கிள் டயரில் ஓரளவுக்கு காற்று இருந்தால் தான் சைக்கிள் இலகுவாக ஓடும். காற்றழுத்தம் குறைவாக இருந்தால் சைக்கிள் ஓடுவது கடினம்.
காற்றழுத்தம் அளவுக்கு மீறினால் டயர் வெடித்து விடும். அதைப்போல மிதமான மன அழுத்தம் நமக்குத் தேவையே. தேர்வு வருகின்றது என கேள்விப்பட்டவுடன் மன அழுத்தத்திற்கு உட்படாத மாணவன் உருப்படியாக படித்து தேர்வில் வெற்றி பெற மாட்டான்.
ஓரளவுக்கு மன அழுத்தம் கொள்ளும் மாணவர்களே திரத்தையுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவார்கள்.
இது போன்ற சூழ்நிலைகளால் ஏற்படும் நல்ல மன அழுத்தம், நம்மை கச்சிதமாகக் காரியத்தை முடிக்கத் தூண்டும். பாம்பின் விஷம் கூட மருந்துக்குப் பயன்படுவது போல மன அழுத்தம் நமக்கு நன்மை புரியும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...