கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, April 8, 2019
இலுப்பை மரம் ஒரு கற்பக விருட்சம்
▪ இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.
▪ இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம்.. வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது.. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்..
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது..
▪ இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம்.. இதன் இலை.. பூ .. விதை.. பட்டை, எண்ணெய், புண்ணாக்கு..
ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது. .
▪ இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை.. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்...
*ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை* என்பது பழமொழி..
▪ ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும்.. ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.. ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம்..
▪ இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது..
இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி.. சமையலுக்கும் இது பயன்படுகிறது..
▪ இது தவிர பாம்பு விஷம்.. வாத நோய்.. சக்கரை வியாதி.. சளி.. இருமல்.. மூலநோய்.. வயிற்றுப்புண்.. சுவாசக்கோளாறு.. காயம்.. ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது..👌👌
▪ இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்..
விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது..
▪உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது..
▪ வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்..
▪ஒரு கண அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது.. அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.. இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது..
▪வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.. இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.. வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.. கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி..
▪ *இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்..* *சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்…*
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...