
#கவணிக்காமல்விட்டால்
#சிறுநீரகம்_செயலிழப்பு #ஏற்படும்.😲
😲 நெஃப்ராடிக் சின்ட்ரோம்.❗
இது ஒரு பொதுப் பெயராக வழங்கப்படும் நோயாகும். இது சிறுநீரில் வெகுவாகக் கூடி விட்ட புரோட்டினால் ( அல்போமின்)ஏற்படுவது. அல்லது இரத்தத்தில் வெகுவாகக் குறைந்து விட்ட புரோட்டினினால் ஏற்படுவது. இது எந்த வயதிலும் ஏற்படலாம். பெரும்பாலும் வயதானவர்களைவிட குழந்தைகளுக்கே இவ்வகை நோய்கள் காணப்படுகின்றன.
சிறுநீரகங்கள் நம் உடலில் சிறு சிறு வடிகட்டிகளாக வேலை செய்கின்றன. அவை கழிவுப்
பொருட்களையும் வேண்டாத திரவங்களையும் உடலிலிருந்து அகற்றுகின்றன. இந்த வடிகட்டிகளின் துளைகள் மிக மிக நுண்ணிய அளவில் சிறிதாக இருக்கும். ஆகவே அளவில் சற்று அதிகமாக இருக்கும் புரோட்டின்(அல்போமின்) அவற்றுக்குள் நுழைய முடியாது.
ஆனால் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகத்து துளைகள் (நெஃப்ரான்கள்) பெரிதாகிவிடுகின்றன.
சிறுநீரில் புரோட்டின் சிறுநீற்றுடன் கலந்து வெளியேறுகிறது. இது இரத்தத்திலுள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கிறது. இது வீக்கத்தைக் கொண்டு வருகிறது.
❓Nephrotic syndrome காட்டும் அறிகுறிகள்.
இந்த நோய் எந்த ஒரு வயதிலும் வரலாம். ஆனால் 2 வயதிலிருந்து 8 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளிலேயே மிகவும் பொதுவாகக் காணப்படும். பெண் குழந்தைகளை விட, இது ஆண் குழந்தைகளையே அதிகம் தாக்கக்கூடியது.
கண்களைச் சுற்றி ஒரு வீக்கமும், முகத்தில் வீக்கம் காண்பதுமே இந்த நோய்க்கு முதல் அறிகுறியாகும். கண்களைச் சுற்றி வரும் வீக்கத்தினால், நோயாளி முதன் முதலில் ஒரு கண்டாக்டரையே கண்டு ஆலோசிப்பார்கள்.
மேற்சொல்லப்பட்ட வீக்கங்கள், காலை வேளைகளிலேயே பெரும்பாலும் காணப்படுவது. மாலையில் அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாது.
நாட்கள் செல்லச் செல்ல, வீக்கம் பாதங்கலிலும், கைகளிலும், அடி வயிற்றிலும் பிறகு உடல் எங்கிலும் பெருகிக் கொண்டே செல்கிறது. கூடவே உடல் எடையும் கூடுகிறது.
மூச்சுக் குழல் பாதையில் தொற்றுதலுக்குப் பிறகு வீக்கங்கள் வரலாம். காய்ச்சலும் பல நோயாளிகளுக்கு வரலாம்.
வீக்கம் ஒன்று காண்பதைத்தவிர, நோயாளிகள் பெரும்பாலும் சகஜ நிலையிலேயே சுகத்துடன் காணப்படுவார்கள். துடிப்புடனும் வேறு நோய் நொடியில்லாமல் வாழ்வார்கள்.
பொதுவாக சிறுநீர் குறைவாகக் கழிப்பார்கள். சாதாரண நிலைகளுக்கு இது குறைவாகவே இருக்கும்.
சிறுநீரில் நுரை பொங்கி வரும். வெண்மையான நிறமுள்ள பொருட்களின் மீது சிறுநீர் கழிந்தால், கறை காணப்படும். இது சிறுநீரில் #அல்போமின்
இருப்பதைக் காட்டும்.
சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்படுவது, அதிக இரத்த அழுத்தம் காணப்படுவது போன்றவை இந்த நோய் இருக்கும்பொழுது அவ்வளவாக இருப்பதில்லை.
❓இந்த நோயினால் வரும் சிக்கல்கள் யாவை?
மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போகும் தொற்றுதல்கள்,
இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைந்து கட்டிகளாகப் போய் விடுவது,
சத்துல்லாத உணவினால் வரும் கேடுகள்,
இரத்த சோகை,
இருதய நோய் (கொலஸ்ட்ரால் அதிகத்தால் வருவது),
சிறுநீரகம் செயலிழப்பது.
❓நோயைக் கண்டறிவது எப்படி?
அடிப்படை ஆய்வக சோதனைகள்
வீக்கம் உடைய நோயாளிகளுக்கு முதல் முதலாக எடுக்கப்படும் முயற்சி இந்த நோயைக் கண்டறிவதுதான்.
💉 #சோதனைகள்.
1. சிறுநீரில் மிக அதிகம் புரோட்டீன் நஷ்டமாகிப் போவது காணப்படல் வேண்டும்.
2. இரத்தத்தில் மிகக் குறைவாகவே புரோட்டீன் காணப்படுவது அல்லது மிக அதிகமாக கொலஸ்ட்ரால் இருப்பது ஆகும்.
💉 1. #சிறுநீர் #பரிசோதனைகள்
இந்த சோதனையே முதன் முதலில் செய்யப்படல் வேண்டும். சாதாரணமாக, ஆல்புமின் இல்லாததாகக் காட்டும். தற்செயலாக எடுத்து சோதிக்கப்படும் சிறுநீரில்
3+ அல்லது 4+ புரோட்டீன் காணப்படும். அது இந்த நோய் இருப்பதைக் காட்டுகிறது.
சிறுநீரில் ஆல்புமின் இருப்பது மட்டுமே இந்த நோயை ஊர்ஜிதப்படுத்தாது. சிறுநீர் முலமாக புரோட்டின் இழக்கப்படுகிறது என்பதை மட்டும் காட்டும் அடையாளம் அது. மேற்கொண்டு சோதனை செய்தாலே, புரோட்டின் இழப்பிற்கு சரியான காரணம் தெரிய வரும்.
மைக்ரோஸ்கோப்பின் மூலம் சிறுநீரை சோதித்து அறியும் பொழுது சிவப்பு இரத்த அணுக்களும், வெள்ளை அணுக்களும் பெரும்பாலும் காணப்படாது.
இந்த நோயினால் சிறுநீர் மூலமாக புரோட்டீன் இழப்பது, ஒரு நாளைக்கு
3 கிராம்களுக்கும் மேலாக இருக்கும்.
24 மணி நேரங்களில் எவ்வளவு புரோட்டின் இழக்கப்படுகிறது என்பதை ஒரு சோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த சோதனைகள் துல்லியமாக அந்த இழப்பைக் காட்டும். அந்த இழப்பு மிகக் குறைவாக, மிதமானதாக இருக்கிறதா அல்லது அதிகமாக இருக்கிறதா என்பதைக் காட்டும்.