கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, June 25, 2019
கரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க நேச்சுரல் ஸ்ப்ரே தயாரிக்கும் முறை!
பெரும்பாலானோரில் வீட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று தான் கரப்பான் பூச்சி. இது வீட்டின் சமையலறை, குளியலறையில் தான் அதிகம் குடிக்கொண்டிருக்கும். இதற்கு அடுத்தப்படியாக நம் தூக்கத்தைக் கெடுக்க வருவது தான் கொசு. இந்த இரண்டும் ஒரு வீட்டில் அதிகம் இருந்தால், அவ்வீட்டில் இருக்கவே முடியாது.
இவ்விரண்டுமே ஒன்றிற்கு ஒன்று போட்டிப் போட்டு நம்மை தொல்லை செய்ய வருபவைகளாகும். இவைகளை ஒழித்துக்கட்ட ஓர் அற்புத வழி உள்ளது. சரி, இப்போது அந்த வழி என்னவென்று காண்போம்.
நேச்சுரல் ஸ்ப்ரே
கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அழிப்பதற்கு கடைகளில் கெமிக்கல் கலந்த ஸ்ப்ரேக்கள் விற்கப்படலாம். ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல் தெரிந்தோ தெரியாமலோ நம் உடலினுள் சென்றுவிட்டால், அதனால் பேராபத்தை சந்திக்க நேரிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை இந்த தொல்லைகளை அழிக்கும் ஒரு நேச்சுரல் ஸ்ப்ரேவைக் கொடுத்துள்ளது.
தேவையான பொருட்கள்:
ஷாம்பு – 1/2 கப்
வினிகர் – 1/2 கப்
வெஜிடேபிள் ஆயில் – 1/2 கப்
தயாரிக்கும் முறை:
முதலில் ஸ்ப்ரே பாட்டிலில் அனைத்து பொருட்களையும் ஊற்றி நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அழிக்கும் நேச்சுரல் ஸ்ப்ரே தயார்.
பயன்படுத்தும் முறை:
இந்த நேச்சுரல் ஸ்ப்ரேவை கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வரும் இடத்தில் தெளித்துவிட்டால், அப்பூச்சிகள் வருவது தடுக்கப்படும். மேலும் இந்த கலவையை கை, கால்களில் கூட தடவிக் கொள்ளலாம். இதனால் கொசுக்கள் நம்மை அண்டாது
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...