Wednesday, June 26, 2019

கூந்தல், நீளமாக வளர...! இயற்கை, வழிகள்…!*

💥 சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களில் நல்ல பலனை காணலாம்.

சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களில் நல்ல பலனை காணலாம்.

அரைமுடி தேங்காயுடன், இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து அரைத்து, சாற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின், வழக்கமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைக்கு குளியுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு குளிக்கலாம். வெறும் தேங்காய்ப் பாலை தலைக்கு தேய்த்து ஊற வைத்தும் குளிக்கலாம்.

* கற்றாழையின் நடுவில், கத்தியால் நீளமாக ஒரு கீறல் போடுங்கள். உள்ளே உள்ள கொழ கொழப்பான சோற்று பகுதியில், கையளவு வெந்தயத்தைப் போட்டு, கற்றாழையை பழையபடி மூடி, நூலால் கட்டி விடவும். உள்ளே இருக்கும் சோற்றில் ஊறும் வெந்தயம், இரண்டு நாட்களில் முளை கட்டியிருக்கும். அதனுடன் கற்றாழையின் சோற்றையும் எடுத்து, நன்றாக அரைத்து வடையாக தட்டி வெயிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊறவிட்டு தலைக்கு தினமும் பூசி வர, முடி நன்றாக வளரும். மேலும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.

* புதினா இலைகளை சுத்தமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் டிகாஷனை தலைக்கு பூசி, ஊறவைத்தும் குளிக்கலாம். இதேபோல, செம்பருத்தி இலைகளை கொதி நீரில் போட்டு, டிகாஷனை எடுத்தும் குளிக்கலாம். செம்பருத்தி பூவை, தேங்காய் எண்ணெயில் ஊற போட்டு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

*நீளமான கூந்தல் வளர ரகசியம் இதுதான்.. தினமும் செய்தால் பலன் நிச்சயம்..!*

ஒரு நாளைக்கு 50 - 100 முடிகள் உதிரும். பின் குறைந்த நாட்களிலேயே உதிர்ந்த முடிகள் மீண்டும் வளர்ந்துவிடும் .

முடி கொட்டுவது இயல்பான ஒன்றுதான். ஒரு நாளைக்கு 50 - 100 முடிகள் உதிரும் என தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மடாலஜி குறிப்பிடுகிறது . பின் குறைந்த நாட்களிலேயே உதிர்ந்த முடிகள் மீண்டும் வளர்ந்துவிடும் என்கிறது. அதேபோல் வருடத்திற்கு 6 இஞ்ச் அளவிற்கு முடியின் நீளம் வளரும் எனவும் கூறுகிறது.

இயல்பை விட கைகளில் தொடும்போதே 100க்கும் மேற்பட்ட முடி உதிர்கிறதெனில் கவனிக்க வேண்டியது அவசியம். பொதுவாகப் பிரசவத்திற்குப் பின், தைராய்டு, மன அழுத்தம் போன்ற காரணங்களுக்காகவும் முடி உதிர்வு அதிகமாகும். இவை எதுவும் உங்களுக்கு இல்லை என்றாலும் முடி உதிர்கிறதெனில் இந்த உணவுகளைத் தினம் உட்கொள்ளுங்கள்.

முட்டை : முட்டையில் முடி வளர்ச்சிக்கு உதவும் பையோடின் மற்றும் மினரல்கள் இருக்கின்றன. முடியின் உறுதித் தன்மைக்கும் முட்டை உதவுகிறது. பையோடின் குறைபாடு இருந்தாலும் அதைச் சரிசெய்யும். அதோடு இறைச்சி, மீன், நட்ஸ் வகைகளையும் உட்கொள்ளுங்கள்.

நட்ஸ் வகைகள் : நட்ஸ் வகைகளில் செலினியம் எனப்படும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சத்து அதிகமாக இருக்கிறது. அதேபோல் அது புதிய முடியை உடனடியாக வளரவும் செய்கிறது. குறிப்பாக பிரேசில் நட்ஸில்தான் அதிகமான செலினியம் இருக்கிறது.

மீன் வகைகள் : ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளில் மீன் மிக முக்கிய உணவு. இதில் இருக்கும் ஒமெகா - 3 கொழுப்பு அமிலம் இதயத்திற்கு நல்லது என்பார்கள். இதயத்திற்கு மட்டுமல்ல முடி வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. அதேபோல் அதில் இருக்கும்.விட்டமின் D ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவுகிறது. இது 2018 ஆண்டு நடத்திய விலங்குகள் ஆராய்ச்சியில் மீன் எண்ணெய்யின் நன்மைகளை ஆராய்ச்சி செய்தபோது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

விட்டமின் D ஊட்டச்சத்து : விட்டமின் D நோய் எதிர்ப்புச் சக்திக்கு உதவக் கூடியது. தினமும் ஆரஞ்சு ஜூஸ் , தயிர், மீன், சீஸ் மஷ்ரூம், பால் போன்ற விட்டமின் D நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

அமீனோ அமிலம் : இதை L-lysine என்றும் அழைக்கின்றனர். இது ஏற்கனவே முடியின் வேர்களில் இருக்கக்கூடியது. அதற்கான உணவுதான் அமீனோ அமிலம். அதைச் சரியாக உட்கொண்டால் அதன் ஆற்றல் தூண்டப்பட்டு ஆரோக்கியமான உறுதியான கூந்தல் உருவாகும். எந்த அளவு முடி உதிர்வு ஏற்பட்டதோ அதைவிட இரு மடங்கு உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இது இறைச்சி, முட்டை, பீன்ஸ், நட்ஸ் போன்ற உணவுகளிலேயே இருக்கிறது.
இதேபோல் இரும்புச் சத்து, ஸிங்க், புரதச் சத்து விட்டமின் c, ஃபோலிக் ஆசிட் போன்ற ஊட்டச்சத்துகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை முடி வளர்ச்சிக்கு மிக முக்கிய சத்துகளாகும்.