
கிரக பார்வை என்பதை விட கிரக சேர்க்கை என்பது தாக்கம் அதிகம் வாய்ந்தது...
எப்பொழுதும் சுப சேர்க்கை கொண்டு தான் முதலில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது..ஆனால் அவசியம் கருதி இந்த சேர்க்கையை எழுதுகிறேன்...இந்த சேர்க்கை உள்ளவர்களுக்கு எவ்வளவு துன்பம் உள்ளது என்பது தனிப்பட்ட முறையில் பார்க்க முடிந்தது...
முதலில் சனிக்கு சில கெட்ட குணங்களை மனிதருக்கு தரும் ஆற்றல் கொண்டது.. அதில் பொய், தாழ்வு மனப்பான்மை, சோம்பேறித்தனம்,ஞாபக மறதி, உண்மையை ஏற்று கொள்ள மறுக்கும் குறுகிய மனப்பான்மை முக்கியமானவையாகும்..
ராகுவை எடுத்து கொண்டோம் என்றால் பேராசை, போதை, எதிலும் திருப்தி படாத மனநிலை ,இல்லாததை இருப்பது போல் நம்ப வைத்து குழியில் தள்ளுவது போன்ற குணங்களாகும்..
கணிதத்தில் வேண்டுமானால் மைனஸ் *மைனஸ் பிளஸ் ஆக மாறலாம்..ஆனால் ஜோதிடத்தில் மைனஸ் *மைனஸ் இரு மடங்கு மைனஸ் ஆக மாறி விடும்..
இந்த சேர்க்கை உள்ளவர்களுக்கு இவர்களின் மனதை ராகு ஆள்வார்.. ஆனால் இவர்களின் விதியை சனியே தீர்மானிப்பார்..உதாரணமாக இவர்கள் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்க வேண்டும் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கும் ஆனால் இவர்களின் விதியை தீர்மானிக்கும் சனி எதையும் அவர்கள் விருப்பப்படி உடனே கொடுத்து விட மாட்டார்...
இதனாலேயே மனதுக்குள் ஒரு புழுக்கமும் வேதனையும் வாட்டி எடுத்து கொண்டே இருக்கும்... இவர்களை சமுதாயத்தில் பிற மக்களும் சற்று தள்ளி வைக்கும் அளவுக்கு சூழ்நிலைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது....
இருப்பினும் இவர்கள் இருவரின் தீய பலன்களும் மாற வேண்டும் என்றால் குரு பகவான் தனது விசேஷ பார்வையான 5 மற்றும் 9ம் பார்வையால் பார்ப்பது நல்லது..7ம் பார்வையும் நல்லது என்றாலும் பதிலுக்கு இவர்கள் இருவரும் குருவை பார்த்து வலுவிழக்க செய்வார்கள் என்பதால் அது சற்று நல்லதில்லை... ஏனைய சுபர்களுக்கு 7ம் பார்வை மட்டுமே உள்ளதால் அவர்களின் காரகத்துவம் இவர்களால் கெடும் என்பதும் குறிப்பிடத்தக்கது...இருப்பினும் தாக்கம் குறையும் என்பதில் ஐயமில்லை...
எந்த பாவத்தில் சேர்கிறார்கள் என்பதை பொறுத்து பலன்கள் வேறுபடும்... அதனால் முழுமையாக அச்சம் கொள்ள தேவையில்லை...
சரி இது போன்ற சேர்க்கைக்கு பரிகாரம் தான் என்ன??? சனியை நம்புவது தான் பரிகாரமாக இருக்க முடியும்.. அவர் ஒரு ஜாதகர் கற்க வேண்டிய பாடங்களை கற்று விட்டால் தேவையானவற்றை கொடுத்து விடுவார்... மனதை இயக்கும் ராகுவை அடக்கும் ஆற்றலை பெற வேண்டும்... அது ஒன்று தான் இந்த பிறவியில் உங்கள் மன உளைச்சலை குறைக்கும் ஒரே தீர்வு ஆகும்...இது கடினமான காரியம் என்றாலும் வேறு வழியில்லை...
திருக்காளஹஸ்திக்கு சென்று சந்நிதியில் சனி கிழமை ராகு காலம் காலை 9 முதல் 10.30 வரை நடை பெறும் ருட்ரக்ஷ பூஜையில் வருடம் தோறும் கலந்து கொள்வது சற்று கெடு பலன்களை குறைக்கும்..
இதில்லாமல் வேறு பரிஹாரம் இருந்தாலும் கூறுகிறேன்.. இந்த சேர்க்கை உள்ளவர்கள் துன்பம் தீர வேண்டும் என்பதே பரம்பொருளிடம் நான் வைக்கும் வேண்டுதல் ஆகும்...
யாரையும் பயமுறுத்த இந்த பதிவு இல்லை..விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே இந்த பதிவு.. மனம் வருந்த வேண்டாம் இந்த சேர்க்கை உள்ளவர்கள்.. இதில் ஆயிரம் கணக்கீடுகள் உள்ளன ... அதையெல்லாம் பார்த்தே பலன்களை தீர்மானிக்க வேண்டும்....நம்மை மிஞ்சிய சக்தியால் விதியை மாற்றி எழுத முடியும் என்பதை நினைவிற் கொள்ளவும்....
நன்றி