Friday, June 21, 2019

சனி கிரக பாதிப்பு… செய்ய வேண்டிய பரிகாரங்கள்!



* சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைதோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் வழிபாடு செய்யலாம்.
* அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவலாம்..