Wednesday, June 26, 2019

இறைவழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள் எவை?



* பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.
* விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.
* சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.
* அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.
* துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.
* சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.
* சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது
* பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது.