
ஒரு வகையில் நேர்மையாக வாழும் போது சில இன்னல்கள் வரத் தான் செய்யும்.
ஆனால் அதற்காக வழிநெறி தவறி வாழ்க்கையை நடத்துவது உன் அழிவை நீயே தேடிக் கொள்வதற்க்கு சமம்.
உன்னுள் இருக்கும் கவலைகளை எல்லாரிடத்திலும் சொல்லாதே. சில சமயங்களில் அச்செயலே உனக்கு எதிரியாய் வந்து நிற்கும்.
ஏனென்றால், சிலருக்கு எப்போதும் நீ கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று உனக்கு கேடு நினைப்பவர்களிடமே போய் நீ உன் கவலைகளுக்கு ஆறுதல் தேடுகிறாய்.
அப்பேர்பட்டவர்களோ, உனக்கு முன்பாக உதடுகளில் வருத்தம் தெரிவித்து, மனதளவில் நீ படும் துயரங்களை கண்டு மகிழ்கிறார்கள்.
இன்னும் எப்படி உன்னை குழம்பச் செய்து அதை அதிகபடுத்தலாம் என்று யோசிக்கிறார்கள்.
உன்மேல் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் யார் என்பதை புரிந்து கொள்.
அதேசமயம், உன்னை சுற்றியுள்ளவர்களில் யார் நல்லவர் என்று கண்டு பிடிப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாரையும் சந்தேகப்படாதே
அன்பை புரிந்து கொள்ளும் நேரமும் சூழ்நிலையும் நிச்சயம் வரும்.
எதற்காகவும் விரக்தி அடையாதே, நம்பிக்கை தான் வாழ்க்கை....
பயமின்றி உன் இலக்குகளை நோக்கி போய்க் கொண்டிரு.
யாரையும் இகழ்ந்து பேசாதே, எவரையும் துச்சமாகக் கருதாதே.
நம்பிக்கையானவராக அவர்களுக்கு நீ இருந்தும் உன்னைக் காயப்படுத்தியதற்காக உண்டான தீவினை அவர்களைப் போய் சேரும்.
நீ நிம்மதியுடனும்,சந்தோஷத்துடனும் வாழ்வாய் அதற்கு நான் பொறுப்பு.
உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.
உன் அம்மாவாக அப்பாவாக உனக்கு துணை நின்று உண்மையை எடுத்துரைப்பேன்.
என் மேல் நீ கொண்ட நம்பிக்கையும் பொறுமையும் உன்னை எப்போதும் காவலாய் காக்கும்..
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு...
நீ எல்லா செல்வ வளங்களைப் பெற்று நிம்மதியான வாழ்க்கையை கூடிய விரைவில் பெறுவாய்.
கவலைபடாதே நான் இருக்கிறேன் உன்னோடு என்றும் என்றென்று....
நல்லதே நடக்கும்..!
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !
இப்படிக்கு
#உனக்கு_ஜெயம்_தரும்_சாய்பாபா.
#Om_sai_ram. #Om_namashivaya.
#நன்றி
#ஓம்_சாய்ராம்...