Wednesday, June 19, 2019

அமானுஷ்ய சக்திகள்



ஏவல் பில்லி சூன்ய எந்திர தகடுகளின் வலிமையை உடைக்க உங்களுக்கு செய்வினை,ஏவல், எந்திர தகடுகள் மூலம செய்து வைக்கப்பட்டிருப்பின் அதை அறிந்த உடன் கஜ (யானை) கோமியம் (சிறுநீர்) கொண்டு வந்து வீடு முழுவதும் தெளித்தால் எந்திர தகடின் சக்தியை அழித்துவிடும்.

தின்பண்டங்கள், ஊணவின் மூலம் செய்வினை, ஏவல் மருந்து உடலில் கொடுக்கப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு இருப்பின் அதை உறுதி படுத்த முருங்கை இலையை சாறு எடுத்து உள்ளங்கையில் விட சாறு உறைந்து கெட்டி பட்டால் உடலில் மருந்து இருக்கிறது என அறியவும். அதை எடுக்க அதிகாலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காயை சாறு பிழிந்து உட்கொண்டால் மருந்தின் சக்தி முறியும். வயிற்றுபோக்கு உண்டாகி உடல் களைப்படையும் அச்சமயம் ஆரஞ்சு பழ இரசம் மட்டும் சிறிது அருந்திவரவும் ஓரே நாளில் உடல் தேறிவிடும்.

கண்திருஷ்டியால் பாதிப்படைந்தால் ஐந்து கற்பூரத்தை இரவு நேரத்தில் தலையை வலம், இடமாக மூன்றுமுறை சுற்றி முச்சந்தியில் ஏற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வீடு போக முறியும்.