கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, June 17, 2019
ஆனி மாத பௌர்ணமி... என்ன செய்ய வேண்டும்? ஆனி மாத பௌர்ணமி!!
🌕 பௌர்ணமி வழிபாடு என்பது புராண காலத்திலும், பண்டைய காலத்திலும் இருந்து வழி வழியாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
🌕 பௌர்ணமியில் ஆலயங்களில் சக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் நடைபெறுகின்றன. பலர் தங்களின் வீடுகளில் சத்யநாராயண பூஜை செய்கின்றனர். பௌர்ணமியில் கிரிவலம் செல்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனதிற்கு அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
🌕 ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன. அதன்படி ஆனி மாத பௌர்ணமி வரும் திங்கட்கிழமை (17.06.2019) அன்று வருகிறது.
விரதமுறை :
🌕 பௌர்ணமியில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்ள வேணடும். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்தல் நன்று.
🌕 ஆனி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.
🌕 வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
பலன்கள் :
🌕 இந்த ஆனி பௌர்ணமி வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம்.
🌕 ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும்.
🌕 ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்ய பலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🌕 ஆனி பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...