Sunday, June 30, 2019

கட்டுக் கொடி(ஜலம் திரட்டி)




பாக்களவு ( 10 கிராம்) இலையை மென்று தின்ன இரத்தப் பேதி, சீதப் பேதி, மூலக் கடுப்பு எரிச்சல் தீரும்.

இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம் தேக எரிவு , அத தாகம், பகு மூத்திரம் தீரும், சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

பெருங் கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சையளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்ப் பெரும் பாடுதீரும்.

இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்க்கரை சேர்த்து iகாலை, மாலை, கொடுக்கப் பேதி தீரும் - கஞ்சி. ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

சிறிதளவு வேரும் 1 துண்டு சுக்கு மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாத வலி, வாத நோய், கீல் வாத நோய் தீரும்,

இலைச் சாற்றை சர்க்கரை கலந்து நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டு வர வெள்ளை , வெட்டை சீதக்கழிச்சல் , இரத்தக்கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக் கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்று வலி தீரும்