கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, June 26, 2019
உப்பை இந்த நாட்களில் வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்....!!
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில், நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது. செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது. உப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள். அதனை வெள்ளிக் கிழமை வாங்குவது நல்லது.
இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.
லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளாங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள். ஆகையால் கல் உப்பாக வாங்கி வைப்பது நல்லது.
வீட்டில் பண வரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும். இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.
எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
