Tuesday, June 25, 2019

பகலில் 01 மணி நேரத்துக்கு தூங்கினால் இந்த வியாதி விரைவில் தாக்கும்.




பலருக்கு மதிய நேரம் சாப்பிட்டால் போதும் கண்கள் சுழற்றி தூங்கி விடுவார்கள், ஆனால் சாப்பிட்ட உடனே தூங்காமல் சிறுது நேரம் கழித்து அரை மணி நேர தூக்கம் என்றால் எந்த பாதகமில்லை. ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமாகதூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பிட்ட சிலபெண்கள் மதியம் தூங்குவதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளார்கள். எனவே இவர்களுக்கு இந்த பதிவுவை பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். உடல் வேலைகளால் அலுப்புவரும்போது மதியம் தூங்கும் குட்டித்தூக்கம் உடலுக்கு புத்துணர்வையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் 40 நிமிடங்களுக்கு அதோகமாக தினமும் தூங்கினால் சர்க்கரைவியாதிக்கான உண்டாகும் ஆபத்து ஏற்படும்.

தினமும் மதியம் குறைந்தது 45- 1 மணிநேரம் தூங்கினால் 45 % பேருக்கு உடல்பருமன், சர்க்கரைவியாதி வரும் ஆபத்து உண்டு என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.



டோக்கியோவிலுள்ள ‘யமடா டோமாஹைட்’ என்ற பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வில் ஈடுபடுத்தினர். இதில் 1/2 மணித்தியாலத்துக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு தூக்கம் சர்க்கரைவியாதி வரவில்லை. ஆனால் 45 – 1 மணி நேரத்திற்கும் தூங்கிய அதிகமானவர்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரியவந்துள்ளது.

சர்க்கரைவியாதி பல நோய்களுக்கான இணைப்பு சங்கிலி என்று கூறலாம். நரம்பு கோளாறு, சிறு நீரக செயலிழப்பு, கண் பார்வை குறைபாடு மற்றும் இதய நோய் என்று பல நோய்களுக்கு சர்க்கரை வியாதியால் உருவாகும் இதற்காக மதியம் தூங்கும் எல்லோருக்கும் சர்க்கரை வியாதி வரும் என்று அர்த்தம் இல்லை. எப்படி உடல் பருமன், உணவுப் பழக்கம், மரபு ஆகியவை சர்க்கரை வியாதிக்கு காரணமாகிறதோ அதுபோல் மதிய தூக்கமும் ஒரு காரணம் என்று கிளாக்ஸோ மருத்துவமனையின் சிறந்த வளர்சிதை நோய்க்கான மருத்துவ வல்லுநர் நவீத்சட்டார் கூறுகிறார்

எனவே இந்த ஆய்வின் இறுதியாக கூடுதல் நேரம் மதியம் தூங்குபரகளுக்கு சர்க்கரை வியாதி மட்டுமல்ல பல நோய்களுக்கும் வித்தாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் இந்த ஆராய்ச்சி கட்டுரை பியர் ரிவியூ மருத்துவ இதழில் வெளிவர இருக்கிறது.