எதையும் முதலில் ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான்

தொடங்குவார்கள். அதிமுக்கியம் பெற்றது ஸ்ரீ கணபதி வழிபாடு. முழு முதற்கடவுளாக வழிபடுகிறோம். பசுஞ்சாணப் பிள்ளையார் பாக்கியத்தை அருளுவார். கொழுக்கட்டை பிரியராக இருந்தாலும் நாம் உண்ணும் எல்லா உணவும் அவருக்கு நிவேதனம் செய்யலாம். சங்கடம் தீர்ப்பது சதுர்த்தி வழிபாடு ஆகும். தொடர்ந்து பனிரெண்டு சதுர்த்தி வழிப்பாடு செய்தால் மிகவும் சிறப்பு. நிச்சயம் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.மூன்றுமுறை வலம் வந்து மூன்று தோப்புக்கரணம் போட்டு அங்கேயே அமர்ந்து சுழிமுனையில் இருந்து பிள்ளையாரை வணங்கிட ஞானம் கைக்கூடும். காரியத்தடை விலகும். வருமானம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உதவிகள் தானே வரும். வீடு, வாகனப் பிராப்தி கிட்டும். செய்தொழில் அபிவிருத்தியாகும். சர்வ ஜனம் வசமாகும். குழந்தைகள் படிப்பு, வளரும். திருமணம் கைகூடும்.
அண்டத்தில் உள்ளது பிண்டம் பிண்டத்தில் உள்ளது அண்டம் என்றனர் சித்தர்கள். இதன் பொருள், பிரபஞ்சத்தில் உள்ள நவகோள்கள் நம் உடலில் உண்டு. இதனையே வள்ளலார் ஊணுடம்பே ஆலயம். உள்ளமே பெருங்கோயில் என்றார்.
எனவே அண்டத்தில் உள்ள 33 கோடி தேவர்கள் இது நம் உடலில் உள்ள ரோமத் துவாரம். நவ துவாரம் நவக்கிரகங்கள். சப்தரிஷி என்பது சப்த தாதுக்கள். இதனை அனைவரும் அறிவர்.
நவகோள்களும் முதல்வனும். மூவரும், முத்தேவியரும்,தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் ஜீவ நதிகளும் உண்டு.
அன்றாடம் நாம் வழிபடும் இஷ்ட தெய்வமும்,உபாசனை தெய்வமும் உண்டு. நம் உடலின் சூட்சுமத்தை, இயக்கும் இறைவன் இருப்பிடத்தை வாசியோகிகளும், ஞானயோகிகளும், சித்தர்களும் அறிவார்கள். சித்தர்கள் தொடர்பு கொண்ட அனைவருக்கும் இவ்வாய்ப்பு உண்டாகும்.
பன்னிரு ஜோதி லிங்கங்களும்,பெருமாளின் 108 திவ்ய தேசங்களும் சக்தியின் 51 பீடங்களும் நம்முடலில் உண்டு. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற ஒளவையாரின் ஞான மொழியையும் அணுகியவர்க்கு நுணுக்கமான ஆற்றல் உண்டு.
பொதுவாக ஜாதக பலன் அறியும்போது லக்னத்தை வைத்து சென்ற பிறவிக் கர்மாவையும்,சந்திரனை வைத்து இந்தப் பிறவி கர்மத்தையும் அறியலாம். இந்தக் கர்மாவை எளிய முறையில் அகலும் வழி, பதினெண் சித்தர்களின் ஜூவ சமாதிக்குக் ( தங்களின் ஜென்ம நட்சத்திரத்தில் அவதரித்த ஆத்ம ஞானிகளின் சமாதிக்கு) சென்று நெய் தீபம் இரண்டு கற்கண்டு, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், எலுமிச்சம்பழம், முந்திரி, திராட்சை, பேரீட்சை வைத்து சுழிமுனையில் இருந்து அந்தச் சித்தரின் திருநாமத்தை ஜெபித்து, தியானம் செய்யவும். பிறகு தங்கள் வேண்டுதல்களைச் சொல்லிட யாவும் பூர்த்தியாகும்.
ஊணுடம்பின் ரகசியத்தை அறிந்து பிரஞ்ச சூட்சுமம் கண்டு, ஈரேழு புவனத்தையும் கண்டு உணர்ந்த பாக்கியசாலிகள் நமது சித்தர்கள். பதினெண் சித்தர்கள் என்றால், நமது உடலில் உள்ள ஆறாதாரச் சக்கரங்கள் என்ற பதியை எண்ணியவர்கள் என்று அர்த்தம். இப்புவியில் மொத்தம் பதினெட்டுச் சித்தர்கள் மட்டுமல்ல கோடிக்கணக்கானவர்கள் உண்டு. அவர்கள் திருவடி பணிந்து கர்மாவை விலக்கி நலம் பெற்று வளமாய் வாழ்வோம்.
மாந்திரீக பயிற்சிக்கு வரும்போது முதலில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். ஆணால் மனம் ஒரு நிலைப்படுவது சிரமமே. இதனை அதிகாலை 3.30 மணிக்குமேல் ஆரம்பிக்க வேண்டும் 5.30 மணிக்குள் முடிக்க வேண்டும். சர்வ சித்திக்கும் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து அதன்மேல் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனம் என்பது பயப்பட வேண்டியது அல்ல .நமது உடலில் 72,000 நாடி நரம்புகளையும் செயல்பட வைக்கக் கூடியது.
முதலில் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு வலது காலத்தூக்கி இடது தொடையில் மேலும், இடது காலத் தூக்கி வலது தொடையின் மீதும் வைக்கவும். நிமிர்ந்து உட்காரவும். சின் முத்திரை அதாவது ஆள்காட்டி விரலையும் ,பெரு விரலையும் சேர்த்துக் கொண்டு மற்ற மூன்று விரலையும் நீட்ட வேண்டும்.முழங்கால் மேல் இரண்டு நுனியைப் பார்த்தவாறு உட்காத்து கொள்ளவும். பிறகு சுவாசத்தையே கவனித்துக் கொண்டு வரவும். மூக்கில் இருந்து வெளியே செல்வது,உட்புகுவது பற்றிய சிந்தனையில் இருக்கவும். முதலில் ஐந்து நிமிடம்,பிறகு 10 நிமிடம் இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமரவும். முதலில் சற்று சிரமமாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல வேகமாகச் செல்லும் சுவாசம் மெதுவாகச் செல்லும். அதே சமயம் மனதும் ஒரு நிலையில் கட்டுப்பட ஆரம்பிக்கும்... நன்றி.