Monday, June 17, 2019

சலபாசனம்



நீரிழிவு ...தொப்பை...மலச்சிக்கல் ...அஜீரணம்...அசிடிட்டி...இடுப்புவலி...முழங்கால் வலி...மூட்டுவலி...SCIATICA ...இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் ஆசனம் சலபாசனம் ...

சலபாசனம் என்றால் வெட்டுக்கிளி ஆசனம் என்று பெயர் ...

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.
வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.


செய்முறை:

குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் படத்திலுள்ளவாறு மேல்நோக்கிய நிலையில்..., மூச்சை உள்ளே இழுத்து கொன்டே... கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும்.
அதாவது அடிவயிறு மட்டும் தரையில் இருக்க....கால்கள் ...கைககள்..தோள்கள் ...விரைப்பாக மேலெழும்ப வேண்டும்...

ஆசனநிலையில் ஆழ்ந்த சுவாசம் எடுக்க வேண்டும்....

ஒரு முறைக்கு 30 முதல் 60 வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும்.

ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம்.இதற்க்கு அர்த்த சலபாசனம் என்று பெயர்...(படம் இனைக்கப்பட்டுள்ளது)


பலன்கள்:

வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.

மாற்று ஆசனம் பவனமுக்தாசனம்

நாளை #சலபாசனம்B

சந்தேகமிருப்பின் பின்னூட்டத்தில் பதியவும்