Saturday, June 22, 2019

லட்சுமி வாசம் செய்யும் இடங்கள்.



* நெல்லி மரத்தை ‘ஹரி பலம்’ என்று கூறுவார்கள். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்

* சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்களப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

* மஞ்சளிலும் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.

* துளசி செடியில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். சாமந்திப் பூ, தாழம்பூ, தாமரை மலர் கொண்டும் லட்சுமியை அர்ச்சிக்கலாம். தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள் பக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.