கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, June 9, 2019
தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறியா?
அப்படி வீட்டில் அல்லது கோயிலில் பூஜைக்கு தேங்காயை உடைக்கும்போது அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது. தேங்காயில் பூ வருவது போன்ற அனைத்து விஷயத்துக்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு. அந்த வகையில் தேங்காய் உடைக்கும்போது அது அழுகிய நிலையில் இருந்தால் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் கொடுத்து மனதில் குழப்பத்தை அளிப்பதால் அதை அபசகுனமாக நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறி என்றும் அவர்களை பிடித்து இருக்கும் தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை அகன்று போகிறது. எனவே இது நல்ல அறிகுறி என்று தான் கூறப்படுகிறது.
உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று பொருள். தேங்காய் உடைக்கும் போது அதில் பூ இருந்தால் அது பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு சகுனமாகக் கருதப்படுகிறது.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...