
* இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் விரதமிருந்து குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும். இந்த விரத வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.