கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, June 12, 2019
வயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி. 🍚
வயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - கால் கிலோ
பாசி பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெ.வெங்காயம் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை :
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சரிசி, பாசிபருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
பூண்டுவை லேசாக இடித்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்சியில் கொட்டி அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரிசி, உப்பு, பாசி பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
சத்தான தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...