கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, April 9, 2019
வெந்தயத்தை முளை கட்டும் முறை:
100 கிராம் வெந்தயத்தை நன்றாக நீரில் கழுவவும்.
100 கிராம் வெந்தயத்திற்கு 200 ML தண்ணீர் ஊற்றி 12 மணிநேரம் ஊறவைக்கவும்.
(200 ML க்கு மேல் நீர் ஊற்றினால் , அதிகப்படியான நீரை வடிகட்ட வேண்டிவரும், அதனால் அந்த நீரில் கலந்த மருத்துவ தன்மை வீணாகும். அதனால் 1 பங்கு வெந்தயத்திற்கு 2 பங்கு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
ஒரு வெள்ளை நிற பருத்தி துணியில் ஊறிய வெந்தயத்தை முடிந்து மூடி வைக்கவும். 36 மணி நேரம் கழித்து துணியை பிரித்து பார்த்தால் வெந்தயம் நன்றாக முளை கட்டியிருக்கும். இதன் எடை 300 கிராம் இருக்கும்.
முளை விட்ட வெந்தயத்தை நன்றாக வெயிலில் காயவைத்தால் மீண்டும் 100கிராம் அளவுதான் இருக்கும்.
காய்ந்த வெந்தயத்தை பொடியாக்கி
காற்றுபுகாமல் பிலாஸ்டிக் புட்டியில் மூடி வைத்து உபயோகப்படுத்தலாம்.
வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடும்
போது அதில் உள்ள 4-ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 - Hydroxyisoleucine) எனும் தாவர இன்சுலின் 40% அதிகமாகிறது என கண்டு அறியப்பட்டுள்ளது.
இந்த பொடியை ஒவ்வொரு முறையும் உணவு உட்கொள்வதற்கு 15 நிமிடத்திற்கு முன் 4 முதல் 6 கிராம் ( சர்க்கரை அளவை பொருத்து) வரை 1 டம்ளர் நீரில் கலந்து சுவைத்து உட்கொள்ள வெண்டும்.
முளை கட்டிய வெந்தயத்தை, மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் மேலே கூறியபடி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவுகட்டுப்பாட்டிற்க்குள் இருக்கும்.
நன்றி
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...