கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Thursday, June 13, 2019
படுத்த 2வது நிமிடத்தில்ஆழமான உறக்கம் பெற இதை செய்ங்க.
இரவு படுத்த 2வது நிமிடத்தில் ஆழமான, நிம்மதியான உறக்கம் பெற்றால் எவ்வளவு சுகமாக இருக்கும்? உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?
முதலில் நமது உடலை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் தட்பவெப்பதிற்கு ஏற்ப தான் நமது உடல் எச்சரிக்கைகளை தரும்.
நமது உடல் குளுமையாக இருக்கும் போது நல்ல உறக்கம் வரும். கால் பாதங்களில் முடிகள் இல்லாததாலும், பாதத்தின் சருமம் மிகவும் மென்மையானது என்பதாலும், இது எளிதாக குளுமையடையும் கருவியாக இருக்கிறது.
இதனால் தான் படுக்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்ள கூறுகின்றனர்.
இதனால், நீங்கள் சீக்கிரமாக உறங்க முடியும். பாதத்தின் சருமம் வாஸ்குலர் கட்டமைப்பு கொண்டுள்ளது. இது உடலின் சூட்டை வேகமாக குறைக்க செய்கிறது.
காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடு ஏற்படும் போது உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால் தான் சரியாக உறங்க முடியாமல் போகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுமட்டுமின்றி, இரவு உறங்குவதற்கு முன்னதாக நீங்கள் குளித்து விட்டு சென்று படுத்தாலும் நல்ல உறக்கம் வரும். இதற்கு காரணமும் உடல் குளுமை அடைவது தான்.
ஆய்வு!
இரவு உறங்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்வதால் வேகமாகவும், ஆழமான நிம்மதியான உறக்கம் வரும் என நியூயார்க் பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக யாரும் குளிர் பானங்கள் பருகிவிட்டு படுக்க செல்ல வேண்டும் என்றில்லை. உண்மையில், நீங்கள் மிக குளுமையான ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிக்க தான் செய்யும்.
குளுமையான தன்மையுள்ள இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதை கோடைக்காலத்தில் பின்பற்றலாமே தவிர, குளிர் காலத்தில் வேண்டாம்.
குளிர் காலத்தில் குளிர்ந்த உணவுகள் உண்பதால் சளி, காய்ச்சல், தொண்டை பிரச்சனை போன்றவை எளிதாக தொற்றிக் கொள்ளும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...