கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Thursday, June 13, 2019
உங்கள் வீட்டில் குபேரன் சிலை இருந்தால் அதை இந்த திசையில் வைக்கவும்.. அப்புறம் பாருங்கள்..
நமது வீட்டில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும் சிரிக்கும் குபேரன் சிலை அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம்.
சிரிக்கும் குபேரன் சிலையின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும். உங்களது நிலை மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப, அவரை எங்கே வைக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் குபேரன் சிலையை கிழக்கு திசையில் வைத்தல் வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது.அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.
பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.
ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு குறிப்பிட்ட திசை, அவருக்கான தனிப்பட்ட ஷெங் சி திசையாக வழங்கப்படும்.சிரிக்கும் குபேரன் சிலையை வீட்டில் இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகுவதிலும், ஒட்டு மொத்த நலனிலும், வாழ்க்கையில் வெற்றி கிட்டுவதிலும் உதவிடும்.
அதேபோல தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறையான விளைவுகளை கொண்டு வரவும் கூட இது ஆதரவாக இருக்கும்.
சிரிக்கும் குபேரன் சிலையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார்.
சிரிக்கும் குபேரன் சிலையை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.
குபேரன் சிலையை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும்.
மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும்.
கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...