Thursday, June 6, 2019

பொன்னாங்கண்ணித் தைலம்



குரு அகத்திய மாமுனிவர் கூறிய முறை மிகச்சிறந்த அனுபவ முறையாகும்

இன்று நம்மில் பலரும் சிரமப்படுகிற விஷயங்களில் ஒன்று கண் சம்பந்தமான நோய்கள் மற்றும் உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய உஷ்ண நோய்கள் இவைகளுக்கு சிறந்ததொரு மருந்தாக பயன்படக்கூடிய பொன்னாங்கண்ணி தைலம் என்னும் சிறந்ததொரு மருந்தை அகத்திய மாமுனிவர் கூறியுள்ளார்

தைலத்தை வாரம் இருமுறை தலை முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து அரை மணி நேரம் உடலில் நன்றாக ஊறவைத்து சீயக்காய் கொண்டு தலை முழுகி வர உடலில் உள்ள சூடு குறைந்து உடல் குளுமை அடையும்

தலை முழுகிய தினத்தன்று அசைவம் சாப்பிட கூடாது
பகல் நேரத்தில் உறங்கக்கூடாது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய பதார்த்தங்களை மட்டும் அன்றைய தினம் பயன்படுத்த வேண்டும்

பொன்னாங்கண்ணி சமூலச்சாறு4லிட்டர்

கரிசாலை சமூலச்சாறு 2 லிட்டர்

நல்லெண்ணெய் 4 லிட்டர்

நெல்லிக்காய் சாறு 4 லிட்டர்

நாட்டு பசு மாட்டின் பால் 4 லிட்டர்

அதிமதுரம் 70 கிராம்

அதிமதுரத்தை சுத்தி செய்து பால் விட்டு நன்றாக அரைத்து மேற்படி உள்ள சாறுகளுடன் கலந்து என்னை கூட்டி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து மெழுகு பதத்தில் வரும் பொழுது தைலத்தை வடிகட்டி ஒரு கண்ணாடி சீசாவில் வைத்துக் கொள்ளவும்
உபயோகம்:-
தைலத்தை வாரம் இருமுறை தலை முழுகி வந்தால் குணமாகும் நோய்கள் நேத்திரரோகம், காசம், பித்தம், உஷ்ண நோய்கள், குணமாகும் கண்ணிற்கு நல்ல ஒளி உண்டாகும் என்று அகத்திய மாமுனிவர் கூறியுள்ளார் இம்மருந்தை முறைப்படி குருவை வணங்கி செய்து பயனடையலாம் நன்றி

குருவே துணை

🌺🌙 அகத்தியர் குடில்🌙🌺