Thursday, June 6, 2019

பசலைக் கீரை



இல்லறம் சிறக்க பசலைக் கீரை உண்ண வேண்டும். பசலைக் கீரையில் போகத்தை உண்டு பண்ணும் சக்தி உள்ளது. இதைதான்

“ போகம் மிகக் கொடுக்கும் போர்செய் கபத்தைப் பெருக்கும் ஆக மதிற்றாக அனலைத் தணிக்கும் - மானிடரின் மன்னு மலமிளக்கும் மாறாஉரிசை தரும் தின்னும் கொடிப்பசலைச் செப்பு “

எனப் பாடிவைத்தனர்.

கொடிப் பசலைக் கீரை நீர் ஆரைக் கீரையைப் போலவே மிகவும் ருசியாக நாவுக்கு இனிமை தரும் என்பதை மேற்கண்ட பாடலால் அறியலாம். பசலைக் கீரையை வாரம் 4 முறை உண்டு வந்தால் சுரோணிதம் உற்பத்தியாகும்.

தாதுவிருத்திக்கான கீரை இது. குளிர்ச்சி அதிகம். பருப்புடன் போட்டு கடையல் செய்து சாப்பிடலாம். துவரம் பருப்பு, பாசிப் பருப்பு போட்டு கடையலாம். பித்தம், நீர்தாரை, வெட்டை, மேகம், சர்ம நோய்கள், சீதபேதி ஆகிய நோய்களை நீக்கும். இதில் கொடிப் பசலை கீரையும் உண்டு. வயலைக் கீரை என்றும் இலக்கியத்தில் பெயர் உண்டு. பச்சை, சிகப்பு இருநிறமாக இந்தக் கீரைகள் இருக்கும். பருப்பு, பாசிபயிறுடன் கடைந்து சாப்பிடலாம்.

பித்தம் தெளிவிக்கும், வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும், தாகம் தணிக்கும், மலக்கட்டை போக்கும், கண்நோய்களைப் போக்கும். வாய்நாற்றம் நீங்கும், சிறுநீர் பெருக்கை குறைக்கும், சீழ்மூலம், ரத்த மூலம் குறையும், குளிர்ச்சி தரும், கண்களைக் குளிர்ச்சியாக்கும்.

குடலில் உணவால், மருந்தால் உண்டாகும் விஷத் தன்மையை போக்கும். பெரும்பாடு தணிக்கும், சிறு கர்ப்ப நோய்களை நீக்கும். இறைச்சி உண்ணும் நாட்களில் மணத்தக்காளி கீரையை உண்ணக் கூடாது . மணத்தக்காளி கீரையைப் புழுங்கலரிசிக் கழுநீரில் அவித்துச் சமைத்துண்பது நலம் தரும். பசலைக் கீரை இல்லறம் சிறக்க பசலைக் கீரை உண்ண வேண்டும் . பசலைக் கீரையில் போகத்தை உண்டு பண்ணும் சக்தி உள்ளது . இதைதான் போகம் மிகக் கொடுக்கும் போர்செய் கபத்தைப் பெருக்கும் ஆக மதிற்றாக அனலைத் தணிக்கும் - மானிடரின் மன்னு மலமிளக்கும் மாறாஉரிசை தரும் தின்னும் கொடிப்பசலைச் செப்பு - எனப் பாடிவைத்தனர் . கொடிப் பசலைக் கீரை நீர் ஆரைக் கீரையைப் போலவே மிகவும் ருசியாக நாவுக்கு இனிமை தரும் என்பதை மேற்கண்ட பாடலால் அறியலாம் . பசலைக் கீரையை வாரம் 4 முறை உண்டு வந்தால் சுரோணிதம் உற்பத்தியாகும் .

தாதுவிருத்திக்கான கீரை இது.

குளிர்ச்சி அதிகம் . பருப்புடன் போட்டு கடையல் செய்து சாப்பிடலாம் , துவரம் பருப்பு , பாசிப் பருப்பு போட்டு கடையலாம் . பித்தம் , நீர்தாரை , வெட்டை , மேகம் , சர்ம நோய்கள் , சீதபேதி ஆகிய நோய்களை நீக்கும் . இதில் கொடிப் பசலை கீரையும் உண்டு , வயலைக் கீரை என்றும் இலக்கியத்தில் பெயர் உண்டு . பச்சை , சிகப்பு இருநிறமாக இந்தக் கீரைகள் இருக்கும் . பருப்பு , பாசிபயிறுடன் கடைந்து சாப்பிடலாம் .