கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, June 9, 2019
கடுக்காய் குணம்
கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன
காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்து
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்
ஏழு வகை கடுக்காய்க்கு ஒவ்வொரு உருவமும் வெவ்வேறு குணங்களும் உள்ளன அவைகள் விஜயா ,ரோகினி, பாதுகா, ஜீவந்தி, திருவிருதா, அபயா, அம்ருதா, என்று ஏழு வகைகள் உள்ளன
விஜயா என்ற கடுக்காய் முன்பக்கம் சங்கு போலவும் பின்பக்கம் பருத்தும் இருக்கும் கை கால்கள் வாதத்தினால் வீங்கி இருந்தால் இதை அரைத்து பற்றுப்போட குணமாகும்
ரோகிணி என்ற கடுக்காய் நான்கு மூளைகளை உள்ளதாய் இருக்கும் இது தலைவலி வயிற்று வலி சன்னிபாத சுரம் முதலியவைகளுக்கு இதை அரைத்துப் போட்டால் குணமாகி விடும்
பாதுகா என்ற கடுக்காய் கபத்தினால் ஏற்படும் நோய்களுக்கு இதை குடிநீராக ஆக்கிக் கொடுத்து குணப்படுத்தலாம்
ஜீவந்தி என்ற கடுக்காய்க்கு தோல் சிகப்பாக இருக்கும் இது கண் மங்களுக்கும் கண்ணில் தண்ணீர் வடிவேலுக்கும் கண் வீக்கத்திற்கும் சூரணமாக செய்து கொடுக்க குணமாகும்
திருவிருதா எனும் கடுக்காய் ஐந்து மூளைகள் கொண்டதாக இருக்கும் இதை லேகியமாக செய்து கொடுக்க ரத்த மூலம் மலச்சிக்கல் வாய் அரோசகம் வாய் நாற்றம் மயக்கம் கிறுகிறுப்பு முதலியன குணமாகும்
அபயா எனும் கடுக்காய் கருப்பாக இருக்கும் இதை கஷாயமாக போட்டு சொறி சிரங்கு தீராத ரணம் நாள்பட்ட புண்களுக்கு இக் கசாயம் விட்டு கழுவி வந்தாள் சீக்கிரம் குணமாகும்
அம்ருதா என்ற கடுக்காய் தோல் வெண்மையாக இருக்கும் இதை சூரணமாக செய்து சாப்பிட மஞ்சள் காமாலை மயக்கம் வயிறு உப்பசம் ரத்த சோகை சரீரம் வறண்டு போதல் ஜீரணமின்மை வாந்தி முதலிய நோய்கள் குணமாகும்
வாயிலும் ,தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்களை ஆற்றிவிடும் தன்மை பெற்றது.அது மட்டுமின்றி மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும் மற்றும்
மஞ்சள்காமாலை மயக்கம் வயிற்று உப்புசம் ரத்த சோகை போன்ற பல வியாதிகளை கண்டிக்கக் கூடிய தன்மை கடுக்காய்க்கு உண்டு என்று நம் சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர்
கடுக்காயுந் தாயுங் கருதி லொன்றென் றாலுங்
கடுக்காயும் நாய்க்கடி தந்தான் நீ கடுக்காய்
பிணி ஒட்டி உடற்றேற்றும் உற்ற அன்னையோ
ஊட்டி உடற்றேற்றுழ வத்து--
மருந்துகளில் மிகச் சிறந்தது கடுக்காய் என்பதை வெண்பாவே இதன் சிறப்பை விளக்குகிறது இதை தனியாகவும் பிற மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தலாம்
இதனை உணவிற்குப்பின் அன்ன துவேசமும் உப்போடு சேர்த்து உண்ண பித்தமும் நெய்யுடன் கலந்து உண்ண வாதமும் நீங்கும்
இன்று நண்பனுக்காக கடுக்காய் சூரணம் தயாராகிறது
🌸💐கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்💐🌸
குருவே துணை
🌺🌙அகத்தியர் குடில்🌙🌺
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...