

‘நறுவிலியி லைக்கு இரைப்பு நாசம் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் – நறுவிலியின்
தன்பழம் இரத்தபிஞ் சார்மேக முந்தீர்க்கும்
நறுவலி'
அகத்தியர் குணவாகடம்..
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும்..
இதயம் நுரையீரலுக்கு பலத்தை கொடுக்கவல்லதும்..
தோல்நோய்களை போக்கக் கூடியதும்..
மூல நோய்களைத் தீர்க்கக் கூடியதும்..
இரத்தத்தை சுத்திகரிப்பதும்..சுவாசக் கோளாறுகளைப் போக்குவதும்..
ஆண்மையை உயிரணுக்களின் எண்ணக்கையைப்..
பெறுக்கக் கூடியதுமான..
நறுவிலி மரத்தின் பலன்கள்..
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நறுவிலி மரம். இதன் அனைத்து பாகங்களும் பயன் தருகிறது. இதன் பழங்கள் அற்புதமான மருந்தாகிறது.
மூக்குச்சளி பழம் என அழைக்கப்படும் இதன் பழங்கள் பசைப்போல ஓட்டிக்கொள்ளும் தன்மை உடையது.
நறுவிலி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்நீரை காலை மாலை பருகி வர நெஞ்சக சளி வெளியேறும். இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்கி ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். புண்களை ஆற்றும். வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும்.அதிக மூச்சிரைப்பு தீரும்..
இதன் இளம் தளிர்களை அரைத்துப் பொடியாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்து காலை இரவு உணவிற்குப் பின் உண்டு வர மலச்சிக்கலும், எந்த வகையான மூலநோயும் குணமாகும்.
இம்மரத்தின் பட்டை..பழத்தின் விதைகள்..இவைகளைப் பொடித்து ஒன்றாகக் கலந்து..உண்டு வர.. பித்தம்.. அக்கி..குடற்புண்..சிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும்.
புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் இலைகளை அரைத்து மேல்பற்றாகப் போடும்போது தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.
நறுவிலி மரத்தின் பழங்களை பயன்படுத்தி தோல்நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
நறுவிலி பழத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி.. இதை வடிகட்டி மேல்பூச்சாக சருமத்தில் பூசிவர தேமல்..படர்தாமரை..அரிப்புடன் கூடிய தோல் நோய்கள் குணமாகும்.
பசை போன்ற திரவத்துடனும் துவர்ப்பு கலந்த இனிப்பு சுவையுடைய நறுவல்லி பழங்களை உலர்த்தி இடித்து சூரணமாக்கி உண்டு வர ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவக் குணம் கொண்டது..
நறுவிலிப் பழங்கள் அதன் சூரணம்..
தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். நீண்ட காலம் ஆங்கில மருந்துகள் உட்கொண்டு ஏற்படும் உடல் சூட்டினால் உண்டாகும் பக்க விளைவுகளுக்கு அற்புதமான தீர்வளிக்கும்.
உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது. காம உணர்வைத் தூண்டுவதோடு, சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும்.
தொழுநோய், தோல்வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிரைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல், சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் நறுவிலிப்பழங்கள் பயன்படுகிறது..