Wednesday, June 12, 2019

உடல் ஆரோக்கியமும்

முருங்கை கீரையை பருப்பு, முட்டை சேர்த்து சமைத்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

ஒரு மாதம் உங்கள் மதிய உணவில் பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து வந்தால் உடலில் புதிய இரத்த அணுக்கள் அதிகரிப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

புதினா ஒருவகையில் மூலிகை உணவென்றும் கூறலாம். புதினாவை சுடுநீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் இரத்த அணுக்கள் அதிகரிக்கும், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தலாம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அரைக்கீரையை காலை, மாலை என இருவேளை பருப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புத்திய இரத்தம் உற்பத்தி ஆகும்.

தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினமும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு. பிறகு ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் உடலை இரத்தம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சேர்ப்பதால் கருகலைப்பு நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

தினமும் இரண்டு அல்லது மூன்று அத்திப்பழம் உண்டு வந்தால். இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒரு டம்ளார் பாலுடன் சேர்த்து அத்திப்பழம் உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.