கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Saturday, June 15, 2019
நோய் நொடி இல்லா திருமண வாழ்க்கைஅமைய இப்பொருத்தம் அவசியம் !! நாடிப் பொருத்தம்..!!
👫மனிதனின் உடல்நிலை நன்றாக இருக்கிறதா? என்பதை பார்க்க மருத்துவர்கள் நாடிப்பிடித்து பார்ப்பார்கள். ஆனால், கணவன் மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கையில் நோய் நொடிகள் வராமல் இருப்பதற்காக பார்க்கப்படுவது நாடிப்பொருத்தம்.
👫நம்முடைய உடலில் மூவகை நாடி உள்ளது. அவை வாதம், பித்தம், கபம் அல்லது சிலேத்துவம் ஆகும். இவ்வகை நாடி மூன்றும் சம அளவில் உடலில் அமைந்தால் உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மூன்று நாடிகளும் சீரான இயக்கத்தில் இருக்கும் வரை மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
👫நாடிப் பொருத்தம் நன்கு அமைந்தால் பேரன், பேத்திகளையும், அவர்களின் திருமணத்தையும் கண்டுகளிக்கும் அளவிற்கு ஆயுள் நீடிக்கும்.
👫27 நட்சத்திரங்களையும் மூன்றாக பிரித்துள்ளனர். ஒரு நாடியை ஒன்பது நட்சத்திரங்களாக பிரித்துள்ளனர். அவை
👫பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.
👫மத்யம நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி
👫சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி
👫பொதுவாக ஆண், பெண் இருவரும் ஒரே நாடியாக அமைந்தால் பொருத்தம் இல்லை. அதாவது ஆண் கேட்டை, பெண் சதயம் எனில் இருவரின் நாடியும் வாத நாடியாக வருகிறது. இவ்வாறு இருவரும் ஒரே நாடியாக வரக்கூடாது. இருவரும் ஒரே நாடியாக இருந்தால் கணவன், மனைவி இருவரும் நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
👫ஆண், பெண் நட்சத்திரங்கள் வௌ;வேறு நாடியாக அமைந்தால் பொருத்தம் உண்டு. உத்தமம் ஆகும். ரஜ்ஜூ, வேதை, தினம் ஆகிய மூன்று பொருத்தங்களும் இருந்தால் நாடிப் பொருத்தம் அவசியம் இல்லை.
👫ஆண், பெண் இருவருக்கும் சமான நாடியாக (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாக கொள்ளப்படுகிறது.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...