
நவகிரகங்களில் மிக முக்கியமான ஒரு கிரகம் சந்திரன்..
உங்களின் மனம் என்னும் விஷயத்தை ஆள்பவர் அவரே...தாய்க்கு காரகத்துவம் வகிப்பதும் அவர் தான்...இந்த உலகில் ஒரு மனிதன் ஜனனித்ததும் அவன் ராசி ,நட்சத்திரம் மற்றும் தசா புத்தி உள்ளிட்டவை சந்திரனை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்க படுகிறது..
நவகிரகங்களில் மிக வேகமான கிரகம் இது தான்..இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார்...மனதுக்கு காரகன் என்பதால் யாரையும் எதிரியாக கருத மாட்டார்..நீசம் அடைந்த எந்த கிரகமும் பங்கம் பெறாத சந்திரனுக்கு கேந்திரத்தில் நின்றால் நீச பங்கம் அடையும் என்பது ஜோதிட விதி..
ரிஷபத்தில் உச்சமும் விருச்சிகத்தில் நீச்சமும் பெறுகிறார்..ஜோதிடத்தில் சந்திர தசை என்பது பத்து ஆண்டுகள் நடை பெறும்... சந்திரன் வளர் பிறையாக இருக்கும் போது நல்லவராகவும் ,தேய்பிறையாக இருக்கும் போது தீயவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது..அவரது ஒளியின் அளவீட்டை வைத்தே அதை முடிவு செய்ய வேண்டும்...
அமாவாசை பௌர்ணமிக்கு எட்டாவது நாள் அஷ்டமியாகவும் ,உங்கள் ராசிக்கு எட்டாம் ராசியில் அவர் சஞ்சரிப்பது சந்திராஷ்டமம் என்றும் கூறுவோம்.அன்றைய தினங்கள் சற்று நல்ல காரியங்கள் தவிர்ப்பது நல்லது என்று கூறும் காரணம் சந்திரன் சற்று எதிர்மறையாக இருக்கும் என்பதால்...
லக்கினங்களில் அவர் மேஷம்,மிதுனம்,கடகம்,துலாம்,கன்னி,மீனம் ஆகியோருக்கு முதன்மையான நற்பலன்கள் தருவார்..
சிம்மத்திற்கு நற்பலன்கள் தருவார் என்றாலும் 12ம் அதிபதி என்பதால் செலவுகளும் அதிகமாக தருவார்...
ரிசபத்திற்கு பரவாயில்ல என்று சொல்லும் அளவிற்கு பலன்கள் கிடைக்கும்..
விருச்சிகத்திற்கு அவர் பாதகாதிபதி என்ற அடிப்படையிலும் தனுசுவிற்கு அவர் அட்டமாதிபதி என்ற அடிப்படையிலும் சற்று சிறிய அளவில் கெடு பலன் தருவார்..பெரும்பாலும் நன்மைகளை மட்டுமே செய்ய முற்படுவார்...
மகரத்திற்கு மாரகாதிபதி என்பதால் கொஞ்சம் பலன்கள் சுமாராக இருக்கும்...கடைசியாக சந்திர தசை வராத கும்ப லக்கின அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்...
சந்திரன் ராகு மற்றும் சனியுடன் சேராமல் இருப்பது நல்லது..பௌர்ணமி சந்திரனாகி ஜாதகத்தில் நிற்பது மேலும் நல்லது...
திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திரனுக்கு உகந்த பரிகார ஸ்தலம் ஆகும்...திங்களூர் கோவில்,சோமநாதர் ஆலயம் என்று பெயர் வாங்கிய அனைத்து ஆலயங்களும் சந்திர ஸ்தலங்கள் ஆகும்...
அமாவாசை முடிந்து சந்திர தரிசனம் செய்வது, பால்,தயிர் அதிகம் சேர்த்து கொள்வது, திங்கள் தோறும் சிவனை வணங்குவது ,சிவலிங்கத்திற்கு பால் ஒரு சொட்டு விடுவது, புனித நதிகளில் சந்திரனை நினைத்து பால் ஊற்றி வழிபடுவது, பௌர்ணமி நாட்களில் கடற்கரையில் அல்லது இருக்கும் இடத்தில் சந்திரனை தரிசிப்பது மிக நல்ல பலன்களை தரும்...
நன்றி