Friday, June 14, 2019

பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை...

பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை... இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்... இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது... இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உண்டாக்குகிறது.....!

இந்த அதிக நியாபக சக்தியால் ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது... ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்.....!

இதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த "தாலி" முறைய கொண்டு வந்தாங்க. அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள். இந்த "தாலி" முறையைத்தான் இப்போது வரை நாம் பயன்படுத்துவது.

பெண்கள் மூக்கு குத்துவதினால் இத்தனை நன்மைகள் இருக்கா...!
பெண்கள் மூக்கு குத்துவது, காது குத்துவது அழகுக்காக மட்டும் அல்ல அதில் அறிவியல் மற்றும் மருத்துவம் ஒளிந்துள்ளது.
மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.
மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.