
சகல சௌபாக்யங்களை தரும் எட்டு திசைகளிலும் உள்ள சக்திகளை பற்றி இந்த பதிவில் காணலாம்...
☆ கிழக்கு பிராம்மி :
பிரம்ம தேவரின் அம்சமாக அவதரித்தவர் பிராம்மி தேவி ஆவார். இவர், கிழக்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். பிராம்மியை வணங்குவதால் கல்வி அறிவும், குழந்தை பேறும் கிடைக்கும்.
☆ தென்கிழக்கு கெளமாரி :
சரவணனின் அம்சமாக அவதரித்தவர் கெளமாரிதேவி ஆவார். இவர் தென்கிழக்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். கெளமாரி தேவியை வணங்குவதால் பதவி உயர்வு கிடைக்கும்.
☆ தெற்கு வராஹி :
மஹாவிஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் வராஹி தேவி ஆவார். இவர் தெற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். வராஹி தேவியை வணங்குவதால் மன தைரியமும், வெற்றியும் கிடைக்கும்.
☆ தென்மேற்கு சியாமளா :
சியாமளா தேவி மீனாட்சி அம்மனின் அம்சமாவார். இவர் தென்மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
☆ மேற்கு வைஷ்ணவி :
மஹா விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் வைஷ்ணவி தேவி ஆவார். இவர் நாராயணி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். வைஷ்ணவி தேவியை வழிபடுவதால் ஆரோக்யமான உடலும், மனதில் மேன்மையும் உண்டாகும்.
☆ வட மேற்கு இந்திராணி :
இந்திராணி இந்திரனின் அம்சமாவார். இவர் வட மேற்கு திசையின் சக்தி வடிவம் ஆவார். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கைத்துணையும், செல்வவளமும் கிடைக்கும்.
☆ வடக்கு சாமுண்டீஸ்வரி :
சாமுண்டீஸ்வரி ருத்ரனின் அம்சமும் வடக்கு திசையின் சக்தி வடிவமும் ஆவார். சாமுண்டீஸ்வரியை வணங்குவதால் எல்லா செயலிலும் வெற்றி கிடைக்கும்.
☆ வடகிழக்கு மகேஸ்வரி :
மகேஸ்வரி சிவனின் அம்சமும் வடகிழக்கு திசையின் சக்தி வடிவமும் ஆவார். மகேஸ்வரியை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.