Thursday, June 13, 2019

புதன்

:

நவகிரகங்களில் நாம் அதிகம் பேசாத அல்லது அலட்டி கொள்ளாத கிரகம் புதன்..

சூரியன் சுக்கிரன் ஆகியோரோடு வான்வெளி பாதையில் முக்கூட்டு கிரகமாக வலம் வருகிறார்...

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்னும் பழமொழிக்கு ஏற்ப ஒருவர் வாய் ஜாலம் மூலம் காரியம் சாதிக்க புதனின் அனுக்கிரகம் அவசியம்..

அறிவியல்,பட்டிமன்றம்,விவசாயம்,தொழில் நுட்பம், கல்வி ,ஜோதிடம் என புதனின் கைவசம் உள்ள துறைகள் ஏராளம்.. வித்தைக்கு காரகத்துவம் வகிப்பதால் வித்யாகாரகன் என்று அழைக்க படுகிறார்..

ஜோதிடத்தில் தாய் மாமனை குறிக்கும் புதன் 7ம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் போது மாமன் மகளையோ மகனையோ மணமுடிக்கும் பாக்கியத்தை அருள்கிறார்..

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சமாதான பிரியர்கள் என்றும் கூறலாம்..சமாதானமாக போவது நல்லது என்பதை புரிந்து வைத்திருப்பார்கள்..சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்றாலும் சூரியனோடும் நல்ல நட்பு உள்ளது..சூரியனோடு நல்ல நிலையில் உள்ள புதன் சேரும் போது புத ஆதித்ய யோகம் உண்டாகும்...

பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகம் புதனால் தர படுகிறது.

மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் நன்மைகளை தயங்காமல் செய்வார்..அதனால் தான் மறைந்த புதன் நிறைந்த தனம் என்று ஒரு பழமொழி உண்டு..

புதன் தசை வராத செவ்வாயின் மேஷ ,விருச்சிக லக்கின காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்...

சனியின் கும்பம் மற்றும் மகர லக்கினத்திற்கு ஒரு கெட்ட ஆதிபத்தியம் உள்ளது என்பதால் ஓரளவுக்கு நன்மை தீமை பார்த்து செய்வார்...

சுக்கிரனின் ரிஷப துலாம் லக்கினங்களுக்கு சுக்கிரனை விடவும் நன்மைகள் அளிப்பார்...

குருவின் மீன தனுசு லக்கினத்திற்கு பாதகதிபதி என்பதாலும் சந்திரனின் கடக லக்கினத்திற்கு ஆதிபத்திய விசேஷம் இல்லாதவர் என்பதாலும் பலன்கள் சுமாராகவே இருக்கும்...இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் சர்ச்சைக்குரிய உறவு முறையும் ஒரு காரணம்..

சிம்மத்திற்கு புதன் நல்ல பலனை கொடுப்பார்..தன் சொந்த லக்கினங்களுக்கு(மிதுனம் மற்றும் கன்னி) அவர் என்றென்றும் நன்மைகளை மட்டுமே செய்வார்..

புதன் நரம்புகளுக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் என்பதால் துர்ஸ்தானங்களில் இருந்து தசை நடத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.. பக்கவாதம் போன்ற நோய்களை கொடுக்கும் வலிமை அவருக்கு உள்ளது...

புதன் வலுப்பெற திருவெண்காடு புதன் ஸ்தலம்,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று வணங்கி வரலாம்..புதன் கிழமை தோறும் பெருமாளை வணங்கி வழிபட்டு வரலாம்..

பொது பரிகாரமாக உணவில் பச்சை பயறு மற்றும் பச்சை பீன்ஸ் ,பச்சை கீரைகள் போன்ற பசுமை நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்... ஏழை மாணவர்களுக்கு கல்வி ரீதியாக உதவி செய்ய வேண்டும்...

நன்றி...