




#செய்முறை:
இரண்டு காலையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். வலது காலை மடக்கி, இடது அடித்தொடையில் வைக்கவும். வலது கையை பின்னால் வீசி கொண்டு வந்து, வலதுகால் கட்டை விரலை பிடியுங்கள். முதுகின் பின்புறம் கைகளை கொண்டு கால் கட்டை விரலை பிடிக்க முடியாதோர்...இரண்டு கைகளாலும்...நீட்டிய காலை மட்டும் பிடித்து கொள்ளலாம்...
முன்னோக்கி நீட்டிய இடது காலின் கட்டை விரலை, இடது கையால் பிடிக்கவும். அடுத்தபடியாக உடலை முன்னோக்கி குனிந்து கொண்டுவந்து, இடதுமுழங்காலை தொடவும். தற்போது ஆசன நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும் இதை 30 முதல் 60 வினாடிகள் வரை செய்யலாம்....கடைசியில் ஆசனத்தை கலைத்து, இதேபோல அடுத்த காலுக்கும் மாற்றி செய்யுங்கள்.
மாற்று ஆசனமாக பூர்வட்டாசனம் அல்லது சேதுபந்தாசனா செய்யலாம்...
#பயன்கள்:
சிறுநீரக கோளாறு, மாத விடாய் பிரச்சினை, வாயு தொல்லை, குடலிறக்கம் நீங்கும்.முழங்கால் வலி,இடுப்புவலி,நீங்கும்... மாணவ-மாணவியர் செய்துவந்தால் இளம்பருவவளர்ச்சி இயல்பானதாக-சரியாக வந்து அமையும்.