
அனுஷம் விருச்சிக ராசியில் முழுமையாக அமைய பெற்ற நட்சத்திரம்...செல்வங்களை அள்ளித்தரும் மகா லக்ஷ்மி பிறந்த நட்சத்திரம் என்று கருதப்படுகிறது...நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார்..
பொதுவாக விருச்சிக சந்திரன் நீசம் என்பதால் மனம் என்பது அதீதமாக அலை பாயும்...ஆனால் நிலையற்ற மனதினை கட்டுப்படுத்தும் செயலை சனி பகவான் செய்வார்....
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயம் பிடித்து விட்டாலும் ஒன்றி விடுவார்கள்.. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் என்பது ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போன்றது...
எவரையும் எளிதாக நம்பும் போது அது நண்பர்,காதலர் அல்லது வேறு எந்த உறவாக இருப்பினும் மனதை காயப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது... இருப்பினும் 35 வயதிற்கு மேல் எல்லாமும் சரியாகி பக்குவப்பட்ட நிலையை அடைய முடியும்.... காயப்பட்டாலும் சரி செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்..
கடவுள் பக்தி என்பது அதிகமாகவே இருக்கும்... வாழ்வில் ஒரு நன்மை நடக்கும் போதே ஒரு தீதும் பின்னோக்கி இவர்களுக்கு வந்தவாறு இருக்கும்..இருப்பினும் இது இப்படித்தான் என்பதை புரிந்து கொண்டால் வாழ்வை எளிமையாக கையாள முடியும்...
அதே போல் நினைத்தவை கிடைக்க நாளாகும் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்..
அனுஷ நட்சத்திர அன்பர்களுக்கான கோயில் சீர்காழி தாலுகாவில் திருநின்றியூர் என்னும் இடத்தில் உள்ள மஹாலக்ஷ்மி ஈஸ்வரர் ஆலயம் ஆகும்..
மஹாலக்ஷ்மி மற்றும் பரசுராமர் வணங்கிய சிறப்புமிகு ஆலயம் ஆகும்..ஜென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது நன்மை தரும்..
நன்றி...